ஸ்ரீநகர்:குடியரசு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு முழுதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தபோதிலும், ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள வணிக நிறுவனத்தில் நேற்று பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில், போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்வீர் ஹூசைன், போலீஸ்காரர் முகமது ஷபி, அவரது மனைவி தன்வீரா மற்றும் அஸ்மத் என்ற பெண் ஆகிய நான்கு பேர் காயம் அடைந்தனர். நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தாக்குதல்நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement