புதுடில்லி :ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத்துக்கு, நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
உத்தர பிரதேச முன்னாள் முதல்வர், மறைந்த கல்யாண் சிங்குக்கும் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காங்., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், பத்ம பூஷண் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.நடிகை சவுகார் ஜானகி, எழுத்தாளர் சிற்பி பாலசுப்ரமணியம் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த ஏழு பேருக்கும், புதுச்சேரியைச் சேர்ந்த இசைக்கலைஞர் முருகையனுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.குடியரசு தினத்தையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.
கலை, சமூக சேவை, பொது சேவை, அறிவியல் - தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி இந்தாண்டு நான்கு பேருக்கு பத்ம விபூஷண், 17 பேருக்கு பத்ம பூஷண், 107 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் என, 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வரும் மார்ச், ஏப்., மாதங்களில் நடைபெறும் விழாக்களில், ஜனாதிபதி இந்த விருதுகளை வழங்குவார். இந்த ஆண்டுக்கான விருது அறிவிக்கப்பட்டோரில், இரண்டுஜோடிகள் அடங்குவர்.
மொத்தம் 34 பேர் பெண்கள். மேலும் வெளிநாட்டினர், வெளிநாட்டு வாழ் இந்தியர், இந்திய வம்சாவளியினர், 10 பேருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.. இதைத் தவிர, 13 பேருக்கு இறப்புக்குப் பிறகு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் தமிழகத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத்துக்கு, உயரிய பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச முதல்வராக இருந்த மறைந்த பா.ஜ., மூத்த தலைவர் கல்யாண் சிங்குக்கும் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்., மூத்த தலைவரும், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத், மார்க்சிஸ்ட் மூத்த தலைவரும், மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்யா உள்ளிட்டோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட உள்ளது.
கொரோனாவுக்கு எதிராக 'கோவாக்சின்' தடுப்பூசி கண்டுபிடித்துள்ள தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த 'பாரத் பயோடெக்' நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ண எல்லா மற்றும் அவரது மனைவி சுசித்ரா எல்லாவுக்கு கூட்டாக பத்ம பூஷண் விருது வழங்கப்பட உள்ளது.
அதேபோல், 'கோவிஷீல்டு' தடுப்பூசி தயாரிக்கும், மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 'சீரம்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சைரஸ் பூனேவாலாவும் இந்த விருது பெற உள்ளார்.
அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான, இந்தியாவை பூர்வீகமாக உடைய சத்ய நாராயண நாதெள்ளா; கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோரும் பத்மவிபூஷண் விருது பெற உள்ளார்.பிரபல நடிகை சவுகார் ஜானகி, எழுத்தாளர் சிற்பி பாலசுப்ரமணியம் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த ஏழு பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டுக்கான விருதுகள் பெறுவோர்:
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE