மலர்ந்தது மக்களாட்சி...- இன்று 73வது குடியரசு தினம்

Added : ஜன 26, 2022 | கருத்துகள் (1)
Advertisement
இந்தியாவின் 73வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. குடியரசு என்பதன் பொருள் மக்களாட்சி. தேர்தல் மூலம் விருப்பமான தலைவர்களை தேர்வு செய்து மக்களே ஆட்சி நடத்துவதுதான் குடியரசு. 1947 ஆக.15ல் சுதந்திரம் பெற்ற போது டொமினியன் அந்தஸ்து தான் இந்தியாவுக்கு ழங்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு உட்பட்ட சுய ஆட்சி பகுதியாக இருந்தது. அவர்கள் நியமித்த கவர்னர் ஜெனரலே நம்
 மலர்ந்தது மக்களாட்சி...-  இன்று 73வது குடியரசு தினம்

இந்தியாவின் 73வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. குடியரசு என்பதன் பொருள் மக்களாட்சி. தேர்தல் மூலம் விருப்பமான தலைவர்களை தேர்வு செய்து மக்களே ஆட்சி நடத்துவதுதான் குடியரசு. 1947 ஆக.15ல் சுதந்திரம் பெற்ற போது டொமினியன் அந்தஸ்து தான் இந்தியாவுக்கு ழங்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு உட்பட்ட சுய ஆட்சி பகுதியாக இருந்தது. அவர்கள் நியமித்த கவர்னர் ஜெனரலே நம் நாட்டின் தலைவராக இருந்தார். பின் இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு, 1950 ஜன.26ல் நடைமுறைக்கு வந்தது. பிரிட்டிஷாரின் கவர்னர் ஜெனரல் பதவி நீக்கப்பட்டு, ஜனாதிபதி பதவி உருவானது. இந்தியா குடியரசு நாடாக மலர்ந்தது.


- ‛'26' ரகசியம் தெரியுமாஅரசியலமைப்பு சட்டம் உருவாக்கும் பணி 1949 நவ. 26ல் முடிவடைந்தது. ஆனால் ஜன. 26ல் தான் அமலுக்கு வந்தது. இதற்கான பின்னணி சுவாரஸ்யமானது. சுதந்திர போராட்டத்தின் போது 1929 டிச.21ல் லாகூர் காங்., மாநாட்டில், 1930 ஜன.26ல் 'பூரண
சுயராஜ்ய தினம்'(முழுமையான சுதந்திரம்) கொண்டாட வேண்டும் என தீர்மானித்தனர். காந்தியின் அழைப்பை ஏற்று, அன்றைய தினம் சுதந்திரதினத்தை
மக்கள் கொண்டாடினர். பின், இத்தினத்திலேயே குடியரசு தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.


முதல் குடிமகன் மகுடம்* இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத். நீண்டகாலம் (12 ஆண்டு, 107 நாள்) பதவி வகித்தவர்.

* மூன்றாவது ஜனாதிபதியான ஜாகிர் உசேன் குறைந்த காலம் (1 ஆண்டு, 355 நாள்) பதவி வகித்தவர்.

*அதிக ஓட்டு (9,05,659) வித்தியாசத்தில் வென்றவர் கே.ஆர்.நாராயணன். குறைந்த ஓட்டில் (87,967) வென்றவர் வி.வி.கிரி.

* கட்சி சார்பின்றி போட்டியிட்டு வென்றவர்கள்ராதாகிருஷ்ணன், ஜாகிர் உசேன், வி.வி.கிரி, அப்துல் கலாம்.

* முதல் பெண் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் (2007 - 2012).

* ராஜேந்திரபிரசாத், ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம், பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

* பா.ஜ., கூட்டணியின் தனிப்பட்ட ஆதரவில் வென்றவர் ராம்நாத் கோவிந்த். இவரது பதவிக்காலம் வரும் ஜூலை 22ல் நிறைவடைகிறது.


வார்த்தை எத்தனை* இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்தவர் ராஜாஜி. ஆங்கிலேயர் சார்பில் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்தவர் மவுன்ட்பேட்டன் பிரபு.

* இந்திய அரசிலமைப்பு சட்டத்தில் 1,46,385 வார்த்தைகள் உள்ளன.

* கனடா, ஜெர்மனி, ரஷ்யா, பிரான்ஸ், தென் ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஜப்பான், அயர்லாந்து, பிரிட்டன், ஆஸ்திரேலியா என 10 நாடுகளிடம் இருந்த சில அம்சங்கள், இந்திய அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டன.

* குடியரசு தின அணிவகுப்பு நடக்கும் ராஜபாதையை 1911ல் வடிவமைத்தவர் பிரிட்டன் கட்டடக்கலை நிபுணர் லட்யன்ஸ்.


எழுதியது யார்இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆங்கிலம், ஹிந்தியில் முழுவதும் கையால் எழுதப்பட்டது.ஆங்கிலத்தில் 'இத்தாலிக்' வடிவில் எழுதியவர் பிரேம் பெகாரி நரைன் ரெய்சதா. 6 மாதத்தில் பணி முடிக்கப்பட்டது. 254 பேனா 'நிப்' பயன்படுத்தப்
பட்டது. ஹிந்தியில் எழுதியவர் வசந்த் கிரிஷ்ஹன் வைய்தா. ஆங்கிலத்தில் 221 பக்கம். எடை 3.75 கிலோ. ஹிந்தியில் 251 பக்கம்.ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட ஒரு பெட்டியில் இரு புத்தகமும் பார்லிமென்ட்
நுாலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.ரம்மியமான மாளிகைஜனாதிபதி இல்லத்தின் பெயர் 'ராஷ்டிரபதி பவன்'. பரப்பளவு 330 ஏக்கர். 4 தளம், 340 அறை உள்ளன. இம்மாளிகை கட்ட 70 கோடி செங்கல் பயன்படுத்தப்பட்டன. ஒரு லட்சம் சதுர மீட்டருக்கு மார்பிள்
கற்கள் பதிக்கப்பட்டன. இதில் தர்பார், அசோகா என இரு பிரமாண்ட ஹால் உள்ளன. இங்கு விருது வழங்குதல் உட்பட அரசு நிகழ்ச்சி நடக்கும்.


மிரட்டும் ராணுவ பலம்* உலகில் ராணுவ வீரர்கள் எண்ணிக்கையில் இந்தியா (14.50 லட்சம்) இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனா (20 லட்சம்) முதலிடத்தில் உள்ளது.
* ரபேல் போர் விமானம் எதிரிகளுக்கு கிலி ஏற்படுத்தும். அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும். 150 கி.மீ., துாரம் வரை சென்று தாக்கும். மணிக்கு 2000 கி.மீ., வேகத்தில்
செல்லும்.

* 2019ல் பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய 'மிக் - 21' போர் விமானம், 1100 கி.மீ., சுற்றளவு துாரம் வரை சென்று தாக்கும். வேகம் மணிக்கு 2230 கி.மீ.

* பிரம்மோஸ் ஏவுகணை இந்தியா - ரஷ்யா இணைந்து தயாரித்தன. மணிக்கு 3704 கி.மீ., வேகத்தில் செல்லும். 800 கி.மீ., துாரம் வரை
சென்று தாக்கும். கப்பல், நீர்மூழ்கி, விமானம், வாகனங்களில் இருந்து ஏவலாம். இந்தியாவின் பிரம்மபுத்திரா, ரஷ்யாவின் மாஸ்கோ நதியிலிருந்து பிரம்மோஸ் பெயர் சூட்டப்பட்டது.

* கப்பல்படைக்கு பலம் சேர்க்க ஐ.என்.எஸ்., ஹரிஹந்த் நீர்மூழ்கி கப்பல் உள்ளது. கடலின் நீருக்கு அடியில் இருந்து அணு ஆயுதங்கள்
செலுத்தும். 3500 கி.மீ., தொலைவிலுள்ள இலக்கை தாக்கும்.


அஞ்சாத நேதாஜிஇந்தியாவின் படை பலத்தை போற்றும் குடியரசு தினத்தில், சுபாஷ் சந்திர போசை நினைவுகூர்வோம். நேதாஜி (தலைவர்) என செல்லமாக அழைக்கப்பட்ட இவர், தேசிய ராணுவத்தை முதன் முதலில் உருவாக்கியவர். இந்தாண்டு இவரது 125வது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது.
* இந்தியன் சிவில் சர்வீஸ் (ஐ.சி.எஸ்.,) தேர்வில் தேர்ச்சி பெற்றார். அரசுப் பணியை உதறிவிட்டு, தேசத்தின் சுதந்திரத்துக்காக ஆங்கிலேயருக்கு எதிராக
ஆயுதம் ஏந்தி போராட்டத்தில் இறங்கினார்.

* 1921 - 1941 வரை 11 முறை சிறை சென்றார். 1930ல் சிறையில் இருந்தவாறு கோல்கட்டா மேயராக வெற்றி பெற்றார்.

*1943 ஜூலை 4 -1945 ஆக. 18 வரை இந்திய தேசிய ராணுவத்தின் தலைவராக இருந்தார்.

* 'தேசத்துக்காக ரத்தம் கொடுங்கள். நான் சுதந்திரம் தருகிறேன்' என்ற நேதாஜியின் பேச்சு இளைஞர்களை தட்டி எழுப்பியது.

* 'ஜெய்ஹிந்த்' (வெல்க இந்தியா) முழக்கத்தை முதலில் எழுப்பியவர் நேதாஜி.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishsrk - Al Ain,ஐக்கிய அரபு நாடுகள்
26-ஜன-202210:40:35 IST Report Abuse
krishsrk இந்திய வரலாறு எத்தனை மகத்தானது.. இந்தியன் என்பதில் மிக பெருமை கொள்ள வேண்டும்.. இப்போது இந்தியாவை காக்க இந்தியன் இடமே போராட வேண்டி இருக்கிறது. ஜெய் ஹிந்தி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X