மலைகளும் மலைகள் சார்ந்த தொல்லியல் சின்னங்களும் பாதுகாக்கப்படுமா?

Added : ஜன 26, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
மதுரை: தமிழகத்தில் மலைகளும் மலைகள் சார்ந்த தொல்லியல் சின்னங்களும் சிதைக்கப்படும் நிலையில் அவற்றை பாதுகாக்க வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் ஆய்வாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.1966 மெட்ராஸ் புராதன வரலாற்று சின்னங்கள் தொல்லியல் இடங்கள் எச்சங்கள் சட்டப்படி முக்கிய சின்னங்கள் பாதுகாக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. தமிழ்நாடு புராதன வரலாற்று
மலைகள், தொல்லியல் சின்னம், தமிழக அரசு

மதுரை: தமிழகத்தில் மலைகளும் மலைகள் சார்ந்த தொல்லியல் சின்னங்களும் சிதைக்கப்படும் நிலையில் அவற்றை பாதுகாக்க வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் ஆய்வாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

1966 மெட்ராஸ் புராதன வரலாற்று சின்னங்கள் தொல்லியல் இடங்கள் எச்சங்கள் சட்டப்படி முக்கிய சின்னங்கள் பாதுகாக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. தமிழ்நாடு புராதன வரலாற்று சின்னங்கள் தொல்லியல் இடங்கள் எச்சங்கள் விதி 1971ன் படி பாதுகாக்கப்பட்ட எல்லை முதல் 100 மீட்டர் வரை தடை செய்யப்பட்ட பகுதியாக அதிலிருந்து 200 மீட்டர் வரை அல்லது சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளும் வரன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும்.

பாதுகாக்கப்பட்ட சின்னங்களை அழித்தால் அகற்றினால் ஊனப்படுத்தினால் மாற்றியமைத்தால் ஊறு விளைவித்தால் 1966 சட்டப்படி 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்ற அறிவிப்பு தொல்லியல் சின்ன வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் இதை சிலர் மதிக்காத வகையில் சேதப்படுத்துவதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர்.


latest tamil news


தொல்லியல் ஆர்வலர்கள் கூறியதாவது: ஒரு மலையில் தொல்லியல் சின்னம் உள்ள இடம் முதல் 200 மீட்டர் வரை தான் பாதுகாக்கப்பட்ட பகுதி என அறிவிப்பதால் எந்த பயனும் இல்லை. மலையில் தொல்லியல் சின்னம் உள்ள பகுதிகள்தவிர ஒருகி.மீ. தாண்டியும் முதுமக்கள் தாழிகள் பானை ஓடு பாறை ஓவியங்கள் ஈம சின்னங்கள் உள்ளிட்ட பல தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் 200 மீட்டர் வரன்முறையைதவிர்த்து மலை முழுவதும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். ஒருவேளை தனியார் இடத்திற்குள் தொல்லியல் சின்னம் இருக்கலாம் என்ற நிலையில் குறைந்தபட்சம் அதை மேப்பிங் செய்ய வேண்டும்.

சிவகங்கை கீழடி அகழாய்வில் பல ஆயிரம் ஆண்டு தமிழர்கள் வாழ்வியலை கண்முன் கொண்டு வந்தது போல் தமிழகம் முழுவதும் உள்ள தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க வேண்டும். குறிப்பாக குவாரி என்ற பெயரில் இயற்கை அன்னை அள்ளி தந்த மலைகளை 'கேக்' போல் வெட்டி அழிப்பவர்களை அங்குள்ள தொல்லியல் சின்னங்களை கோயில்களை சிதைப்பவர்களை தமிழக அரசு தண்டிக்க வேண்டும் என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
26-ஜன-202211:22:49 IST Report Abuse
raja தமிழக அரசு தண்டிக்க வேண்டும்.... அழிக்கிறவனுவோலை இந்த கேடுகெட்ட விடியா மூஞ்சி அரசுதான்... அவனுவோ எப்படி தண்டிப்பானுவோ... போங்கய்யா போய் வேற வேலைப் பாருங்க....
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
26-ஜன-202210:41:50 IST Report Abuse
venkatan நாங்க ரோடு போட்டா பழைய ரோட்டை சுரண்ட மாட்டோம். அப்பாலே குவாரி தொழிலும் கமிஷனும் நடக்க தேவையில்லை..?
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
26-ஜன-202210:33:25 IST Report Abuse
தமிழ்வேள் தொல்லியல் சின்னங்களில் ஆணிகள் கொண்டு, தங்களுடைய சொந்த காதல் காவியம் எழுதும் தமிழக சினிமா அடிமை காதலர்களுக்கு என்ன தண்டனை ? இந்த கூட்டத்துக்கு கடும் தண்டனை , நடு தெருவில் வைத்து அவமானப்படுத்தினால் , பிறகு புராதன சின்னங்களை பாழ்படுத்த பயப்படுவார்கள் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X