குடியரசு தினவிழா; மிடுக்குடன் நடைபோட்ட முப்படை; ஆயுத பலத்தை பறைசாற்றிய இந்தியா

Updated : ஜன 26, 2022 | Added : ஜன 26, 2022 | கருத்துகள் (3)
Advertisement
புதுடில்லி: குடியரசு தினத்தையொட்டி இந்தியாவின் ஆயுத பலத்தை பறைசாற்றும் விதமாக முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றார்.நாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், டில்லி ராஜபாதையில் தேசியக்கொடி ஏற்றினார். அதன்பின்னர், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்றார். இந்த அணிவகுப்பு டில்லி ராஜபாதையில்
RepublicDay, Parade, India, President, Rajpath, குடியரசு தினம், அணிவகுப்பு, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், முப்படைகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: குடியரசு தினத்தையொட்டி இந்தியாவின் ஆயுத பலத்தை பறைசாற்றும் விதமாக முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றார்.

நாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், டில்லி ராஜபாதையில் தேசியக்கொடி ஏற்றினார். அதன்பின்னர், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்றார். இந்த அணிவகுப்பு டில்லி ராஜபாதையில் துவங்கி, இந்தியா கேட் வரை நடந்தது. இதில், 1965, 1971 போரில் பயன்படுத்திய டாங்குகள் மற்றும் தற்போதைய நவீன ஆயுதங்களும் அணிவகுப்பில் இடம்பெற்றன.


latest tamil news



சென்னை ஆவடியில் தயாரான எம்பிடி அர்ஜூன் எம்கே-1 டாங்குகள், சென்சுரியன் டாங்குகள், பிடி-76 டாங்குகள், ஏபிசி டோபாஸ் டாங்குகள் உள்ளிட்டவை அணிவகுப்பில் இடம்பெற்றன. மேலும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எம்கே-1 பீரங்கி இடம்பெற்றிருந்தது.


latest tamil news


Advertisement

தொடர்ந்து, முப்படை வீரர்கள், மாணவர் படையினர் மிடுக்குடன் கம்பீரமாக அணிவகுப்பு நடத்தினர். பின்னர், மாநிலங்களின் சார்பாக அலங்கார ஊர்தியும் இடம்பெற்றன. விமானப்படையை சேர்ந்த 75 போர் விமானங்களும் சாகசங்களை நிகழ்த்தின.


latest tamil news



பாராசூட் ரெஜிமெண்ட், ஜம்மு காஷ்மீர் காலாட்படையினர், எஸ்ஐகேஎச் காலாட்டையினர், அசாம் ரெஜிமெண்ட் படையினர், எல்லை பாதுகாப்பு படையினரின் ஒட்டகப்படை பிரிவினர் அணிவகுப்பில் பங்கேற்றனர்.



latest tamil news





latest tamil news




இந்திய கடற்படையின் திறன்களை வெளிப்படையில், கடற்படை வீரர்களின் அணிவகுப்பு இடம்பெற்றது. ஆத்மநிர்பார் பாரத், ஆசாதி கா அம்ரீத் மகோத்சவ் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.

எதிர்காலத்திற்காக மாற்றமடையும் விமானப்படை என்ற தலைப்பில் விமானப்படை அணிவகுப்புஇடம்பெற்றது. அதில், மிக் 21, க்னாட் போர் விமானங்கள் இலகு ரக ஹெலிகாப்டர்கள், ரபேல் போர் விமானம், அஸ்லேசா ரேடார் ஆகியவற்றின் மாதிரிகள் அணிவகுப்பில் இடம்பெற்றன.

கோவிட் பரவலால் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Akash - Herndon,யூ.எஸ்.ஏ
26-ஜன-202219:44:54 IST Report Abuse
Akash /////
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
26-ஜன-202218:30:16 IST Report Abuse
Lion Drsekar நாங்களும் 1978 இல் அதே இடத்தில இதே போன்று மிடுக்குடன் நடை செய்தோம், மலரும் நினைவுகளாய் நினைத்து வாழ்ந்து கொண்டு வருகிறோம், வந்தே மாதரம்
Rate this:
Cancel
nizamudin - trichy,இந்தியா
26-ஜன-202216:54:56 IST Report Abuse
nizamudin ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X