சென்னிமலை முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்; 'உன்னை சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா'

Added : ஜன 26, 2022
Advertisement
சென்னிமலை: தைப்பூச விழாவுக்கு பிறகு வந்த, ஸ்பெஷல் செவ்வாய்கிழமையான நேற்று, சென்னிமலை முருகன் கோவிலில், பக்தர்கள் தரிசனத்துக்கு குவிந்தனர்.கொரோனா மூன்றாம் அலை பரவலால், சென்னிமலை முருகன் கோவிலில், நடப்பாண்டு தைப்பூச விழாவில், தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. அனைத்து வித கலை நிகழ்ச்சிக்கும் தடை விதிக்கப்பட்டது. பக்தர்களை அனுமதிக்காமல், எளிமையாக கோவில் வளாகத்தில் விழா

சென்னிமலை: தைப்பூச விழாவுக்கு பிறகு வந்த, ஸ்பெஷல் செவ்வாய்கிழமையான நேற்று, சென்னிமலை முருகன் கோவிலில், பக்தர்கள் தரிசனத்துக்கு குவிந்தனர்.

கொரோனா மூன்றாம் அலை பரவலால், சென்னிமலை முருகன் கோவிலில், நடப்பாண்டு தைப்பூச விழாவில், தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. அனைத்து வித கலை நிகழ்ச்சிக்கும் தடை விதிக்கப்பட்டது. பக்தர்களை அனுமதிக்காமல், எளிமையாக கோவில் வளாகத்தில் விழா நடந்தது. தைப்பூச விழாவை தொடர்ந்து, தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதில் வியாழக்கிழமை மட்டும் அனுமதி இருந்தது. வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் கோவில் நடை அடைக்கப்பட்டதால், பக்தர்களால் தரிசனம் செய்ய முடியவில்லை. செவ்வாய்கிழமையான நேற்று, சென்னிமலை முருகன் கோவிலுக்கு, பக்தர்கள் படையெடுத்தனர். வழக்கமாகவே செவ்வாய்கிழமையில், கூட்டம் அதிகமாக இருக்கும். தைப்பூசம் மற்றும் மகா தரிசன நாளுக்கு பிறகு, நேற்று வந்த ஸ்பெஷல் செவ்வாய்கிழமை என்பதால், அதிகாலை முதலே பக்தர்கள் குவிய தொடங்கினர். நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். முக கவசம் அணியாத பக்தர்களை, தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X