பவானிசாகர்: நெல் அறுவடை இயந்திரத்தின் வாடகை கூடியதால், கீழ்பவானி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதால், பவானிசாகர் மற்றும் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில், 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டது. தற்போது அறுவடை பணி துவங்கியுள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து, அறுவடை இயந்திரங்களை வரவழைத்து, விவசாயிகள் அறுவடையை தொடங்கியுள்ளனர். கடந்தாண்டு அறுவடை இயந்திரத்துக்கு ஒரு மணி நேர வாடகை, 3,000 ரூபாயாக இருந்தது. நடப்பாண்டு டீசல் விலை உயர்வால், 3,300 ரூபாயாக அதன் உரிமையாளர்கள் உயர்த்தி விட்டனர். இதனால் விவசாயிகள் வேதனைக்கு ஆளாகியுள்ளனர். அறுவடை இயந்திரங்களுக்கு டீசல் மானியம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: நெல் பயிரிட ஆள் கூலி, உரம், பூச்சிமருந்து உள்ளிட்ட சாகுபடி செலவு அதிகரித்துள்ளது. இத்துடன் அறுவடை இயந்திர வாடகையும் அதிகரித்துள்ளது. நெல்லுக்கு ஆதார விலையும் குறைவாக உள்ளதால் கட்டுப்படி ஆகாது. அறுவடையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை, வேளாண்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து, அறுவடைக்காக பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கு டீசல் மானியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement