கொரோனா கட்டுக்குள் உள்ளது; கலெக்டர் தகவல்

Added : ஜன 26, 2022
Advertisement
ஈரோடு: மாவட்டத்தில், கொரோனா கட்டுக்குள் உள்ளது என்று, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்.ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம், 1,199 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, 631 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது: மாநில கொரோனா பரவல் சராசரியைவிட, ஈரோடு மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் பாதிப்பு உள்ளது. மாவட்டத்தில் 6 முதல் 7 சதவீதம் பேர் மட்டுமே

ஈரோடு: மாவட்டத்தில், கொரோனா கட்டுக்குள் உள்ளது என்று, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம், 1,199 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, 631 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது: மாநில கொரோனா பரவல் சராசரியைவிட, ஈரோடு மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் பாதிப்பு உள்ளது. மாவட்டத்தில் 6 முதல் 7 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுவிட்டு, வீடுகளில் சிகிச்சை தொடர்கின்றனர். அனைத்து தரம் உயர்த்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட கூடுதல் படுக்கை வசதி செய்துள்ளோம். தனியாரிடமும், அரசு மருத்துவமனை, மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் தேவையான படுக்கை வசதி உள்ளது. தேவையான இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்களை ஏற்பாடு செய்து வைத்துள்ளோம். இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X