ஈரோடு: ஈரோட்டில், அம்பேத்கர் சிலை அமைக்கும் இடத்தை, அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார்.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா வளாகத்தில் ஈ.வெ.ரா., - முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா ஆகியோர் சிலைகள் ஏற்கனவே உள்ளன. இந்த வரிசையில் ஒரு சிலை வைக்கும் அளவுக்கு இடம் உள்ளது. அங்கு அம்பேத்கர் சிலையை அமைக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரின. இந்நிலையில் அவ்விடத்தை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி நேற்று ஆய்வு செய்தார்.
பின் அவர் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் அம்பேத்கர் சிலை வைக்க வேண்டும் என பல அமைப்புகள், பொதுமக்கள் வேண்டுகோள் வைத்தனர். முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படவே, சிலை அமைக்க உத்தரவிட்டு, அரசாணை வெளியிட்டுள்ளார். இங்கு பல சிலைகள் உள்ளதால், சில விதிமுறைகளை கடைபிடிக்கவும், அதை அனைத்து கட்சிகள், அமைப்புகள் கடைபிடிக்கவும் வேண்டுகோள் வைத்துள்ளோம். இவ்விடத்தில் ஒவ்வொரு தலைவர் பிறந்தநாள், நினைவு நாளில் தட்டி வைப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதில் மாநகராட்சி சார்பில் இரண்டு 'பிரேம்' அடித்து வைத்து விடுவர். அந்த பிரேமுக்குள் வரும்படி, படத்தையோ, என்ன வைக்க நினைக்கிறார்களோ, அதை வைத்து இரண்டு தினங்களில் எடுத்துவிட வேண்டும். இது யாருக்காகவும் அல்ல. பொது இடம், மாணவர்கள் படிக்க வருவதால், பொதுநோக்குடன் கடைபிடிக்க வேண்டும். இதை எழுத்துப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அமைச்சர் கூறினார். ஆய்வில் எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா, ஆர்.டி.ஓ., பிரேமலதா உட்பட பலர் பங்கேற்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement