பள்ளி சீரமைப்பு கோரி வக்கீல் உண்ணாவிரதம்

Added : ஜன 26, 2022
Advertisement
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் காமராஜர் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில், மேம்பாட்டு பணிகளை செய்யக்கோரி, பள்ளி அருகே வக்கீல் லோகநாதன், 50, தனி ஒருவராக தரையில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று ஈடுபட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது: பள்ளியின் தரை தளத்தை சிமென்ட் தளமாக்க வேண்டும். பள்ளி அருகே நிறுத்தப்பட்டுள்ள கனரக மற்றும் அனைத்து வகை வாகனங்களையும் அப்புறப்படுத்த

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் காமராஜர் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில், மேம்பாட்டு பணிகளை செய்யக்கோரி, பள்ளி அருகே வக்கீல் லோகநாதன், 50, தனி ஒருவராக தரையில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று ஈடுபட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது: பள்ளியின் தரை தளத்தை சிமென்ட் தளமாக்க வேண்டும். பள்ளி அருகே நிறுத்தப்பட்டுள்ள கனரக மற்றும் அனைத்து வகை வாகனங்களையும் அப்புறப்படுத்த வேண்டும். விளையாட்டு மைதானத்தை பயன்படுத்தும் வகையில் சீரமைத்து தர வேண்டும். பள்ளியை சுற்றி காணப்படுகிற சுகாதாரமற்ற சுற்றுச்சூழலை அகற்றி, பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்து மாநகராட்சி, மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X