மூதாட்டி வீட்டில் 15 பவுன் திருட்டு

Added : ஜன 26, 2022
Advertisement
கோபி: கோபி அருகே மூதாட்டி வீட்டில், 15 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் களவாடி சென்றனர். கோபி அருகே புதுப்பாளையத்தை சேர்ந்தவர் பழனியம்மாள், 60; கோவையில் உள்ள மகள் வீட்டுக்கு, கடந்த, 22ம் தேதி சென்றார். நேற்று காலை வீடு திரும்பினார். வீட்டின் முன்பக்க பூட்டை உடைத்து, இரு பீரோக்கள் திறந்து கிடந்தன. இதைப்பார்த்த பழனியம்மாள் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த கோபி

கோபி: கோபி அருகே மூதாட்டி வீட்டில், 15 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் களவாடி சென்றனர். கோபி அருகே புதுப்பாளையத்தை சேர்ந்தவர் பழனியம்மாள், 60; கோவையில் உள்ள மகள் வீட்டுக்கு, கடந்த, 22ம் தேதி சென்றார். நேற்று காலை வீடு திரும்பினார். வீட்டின் முன்பக்க பூட்டை உடைத்து, இரு பீரோக்கள் திறந்து கிடந்தன. இதைப்பார்த்த பழனியம்மாள் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த கோபி டி.எஸ்.பி.,(பயிற்சி) மகேஷ்குமார், இன்ஸ்பெக்டர் சண்முகவேல் சென்றனர். மோப்பநாய் வீரா மற்றும் விரல் ரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இரு பீரோக்களை திறந்து, 15 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து மூதாட்டியிடம் போலீசார் விசாரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X