ஜாக்கிரதை... குழந்தைகளுக்கும் கூன் விழும்: எச்சரிக்கை மணி அடிக்கிறார் நிபுணர்

Updated : ஜன 26, 2022 | Added : ஜன 26, 2022 | கருத்துகள் (2)
Advertisement
கோவை: ''ஆன்லைன் வகுப்புகளில் தொடர்ந்துபங்கேற்கும் பள்ளி குழந்தைகளுக்கு கூன்ஏற்படும் நிலை இருக்கிறது. அதை தவிர்ப்பதற்கான பயிற்சிகளை குழந்தைகள்செய்வது அவசியம்,'' என்கிறார், கோவையைசேர்ந்த இயன்முறை மருத்துவர் மற்றும் கண் பயிற்சி நிபுணர் சதீஷ்குமார்.கொரோனா தொற்று காரணமாக, பள்ளி, கல்லுாரி வகுப்புகள் ஆன்லைன் முறையில் நடத்தப்படுகின்றன. இதில் பங்கேற்கும் மாணவ,

கோவை: ''ஆன்லைன் வகுப்புகளில் தொடர்ந்துபங்கேற்கும் பள்ளி குழந்தைகளுக்கு கூன்ஏற்படும் நிலை இருக்கிறது. அதை தவிர்ப்பதற்கான பயிற்சிகளை குழந்தைகள்செய்வது அவசியம்,'' என்கிறார், கோவையைசேர்ந்த இயன்முறை மருத்துவர் மற்றும் கண் பயிற்சி நிபுணர் சதீஷ்குமார்.

கொரோனா தொற்று காரணமாக, பள்ளி, கல்லுாரி வகுப்புகள் ஆன்லைன் முறையில் நடத்தப்படுகின்றன. இதில் பங்கேற்கும் மாணவ, மாணவியர், பல மணி நேரம் லேப்டாப், கம்ப்யூட்டர், மொபைல் போன் பயன்படுத்த வேண்டியுள்ளது. அவர்களுக்கு, கண் பார்வை குறைபாடு ஏற்படுவதுடன், கூன் விழும் அபாயமும் இருக்கிறது.latest tamil news
இதுதொடர்பாக, இயன்முறை மருத்துவர் சதீஷ்குமார் கூறியதாவது:ஆன்லைன் வகுப்பு, மொபைல் போனில் கேம்ஸ் விளையாடுவது, டியூஷன் என எல்லாம் சேரும்போது, தினமும், 8 முதல், 10 மணி நேரம் மொபைல் அல்லது லேப்டாப்பில் குழந்தைகள் செலவிடுகின்றனர்.
குழந்தைகள் பலருக்கு பார்வை குறைபாடு ஏற்படுகிறது; கிட்டப்பார்வை அதிகரிக்கிறது. பள்ளிகளுக்கு நேரில் செல்லும்போது, பாதிப்பின் வீரியம் முழுவதுமாக தெரியும். இப்பிரச்னைகளை தவிர்க்க, முறையான பயிற்சி அவசியம்.
எந்த முறையில் குழந்தைகள் ஆன்லைன் வகுப்பில் உட்கார வேண்டும்; லேப்டாப் அல்லது மொபைல் போன் எந்த பொசிசனில் இருக்க வேண்டும்; எத்தனை தொலைவில் இருக்க வேண்டும்; பிரைட்நெஸ் எப்படி இருக்க வேண்டும்; விளக்கு வெளிச்சம் எப்படி இருக்க வேண்டும்; எந்த இடத்தில் விளக்கு இருக்க வேண்டும்; எத்தனை நிமிடங்களுக்கு ஒரு முறை ஓய்வெடுக்க வேண்டும்; என்ன முறையில் பயிற்சி செய்ய வேண்டும் என்பதை பெற்றோர் அறிந்திருக்க வேண்டும்.
உரிய பயிற்சி செய்தால், குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க முடியும். இது மட்டுமின்றி, குழந்தைகள் ஒரே இடத்தில் பல மணி நேரம் உட்கார்ந்து, குனிந்தபடியே இருப்பதால், கூன் விழும் அபாயத்துக்கு தள்ளப்படுகின்றனர்.
முதுகெலும்பின் மேற்பகுதி ஒரே கோணத்தில் பல மணி நேரம் தொடர்ந்து இருந்தால், அப்படியே பிடித்துக் கொண்டு விடும். எலும்பு வளர்ச்சி என்பது செடி வளர்வது போல.ஆரம்பத்தில் கோணலாகி, கூன் விழுவதுபோல் குனிந்திருப்பதை கவனிக்காமல் விட்டால், அதுவே நிரந்தர நிலையாகி விடும்.
அச்சம் காரணமாக குழந்தைகளை வெளியே விளையாடவோ, வேறு உடற்பயிற்சி செய்யவோ பெற்றோர் அனுமதிப்பதில்லை. கூன் விழும் அபாயத்தை கருத்தில் கொண்டு, அதை தவிர்ப்பதற்கான பயிற்சிகளை, அவர்களது மேற்பார்வையில் குழந்தைகள் செய்ய வேண்டும்.இவ்வாறு, சதீஷ்குமார் தெரிவித்தார்.


போலீஸ், ராணுவத்தில் சேரும் வாய்ப்பு போகும்!

குழந்தைகளுக்கு ஏற்படுவது கண் நோய் கிடையாது; பார்வை குறைபாடு. பயிற்சி மூலம் சரி செய்ய முடியும். வைட்டமின் ஏ, வைட்டமின் டி அவசியம் தேவை. பயிற்சி, ஊட்டச்சத்து சேரும்போது, பாதிப்புகளை சரி செய்யலாம்.
குழந்தைகளின் கண் பார்வைத்திறனில் குறைபாடு ஏற்பட்டால் எதிர்காலத்தில் போலீஸ், ராணுவம் போன்றவற்றில் சேர முடியாத நிலை ஏற்படும்.
வகுப்பறையில் மாணவன் உயரமாக இருந்தால், பின்னால் உட்கார வைக்கிறோம். அது தவறு. பார்வைத்திறனை பொறுத்தே எந்த இடத்தில் உட்கார வைப்பது என, முடிவெடுக்க வேண்டும். இவ்விஷயத்தில், அரசு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.'ஆப் ஸ்கிரீன் பிரேக் அவசியம்'
பார்வைத்திறன் குறைபாட்டுக்கு தினமும் அரை மணி நேரம் பயிற்சி செய்தால் போதும். அவரவர் குறைபாட்டுக்கு தகுந்தபடி நாட்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். மிக குறைந்த பாதிப்பு என்றால், இரண்டு முதல் மூன்று வார பயிற்சியே போதும். அதிக பாதிப்பு என்றால், பயிற்சிக்காலமும் அதிகமாகும்.
ஒவ்வொரு 20 நிமிடம் லேப்டாப் அல்லது மொபைல் உபயோகத்துக்கும், 20 வினாடிகள் இடைவெளி விட வேண்டும். அந்த, 20 வினாடியும், 20 அடி துாரத்தில் பார்வையைச் செலுத்த வேண்டும். ஆங்கில 'எக்ஸ்' எழுத்து போல், குறுக்கே பார்வையை செலுத்தும் வகையில் பயிற்சி செய்ய வேண்டும்.
அவ்வப்போது லேப்டாப் அல்லது மொபைல் போனின் நான்கு முனைகளையும் பார்த்து, கண் சிமிட்ட வேண்டும்.
தொடர்ந்து மொபைல் போன் பயன்படுத்தும்போது, பலரும் கண் சிமிட்டுவதில்லை. இதுவே கண் வறட்சி ஏற்பட்டு தலைவலி ஏற்பட காரணம். தண்ணீர் குடிப்பது எவ்வாறு முக்கியமோ, அதுபோல், ஞாபகப்படுத்தும் ஏற்பாடு செய்துகொண்டு கண் சிமிட்ட வேண்டும்.
லேப்டாப்பில் பணியாற்றும்போது மொபைல் போன்களை கைக்கு அருகில் வைக்காமல், சற்றுத் தொலைவில் தள்ளி இருக்கும் வகையில் வைத்துக்கொள்வது நல்லது.
டேபிள், சேர் போன்றவற்றை சரியான, நேரான நிலையில் வைத்துக் கொள்வது, கூன் விழும் அபாயத்தை தவிர்க்கும்.
மணிக்கணக்கில் குழந்தைகள் ஆன்லைன் வகுப்பில் இருக்கும்போது, கண் மற்றும் கழுத்து பாதுகாப்புக்கு உரிய பயிற்சி செய்யும் வகையில் பெற்றோர் மேற்பார்வை அவசியம்.
ஆன்லைன் வகுப்புகளில், 10 நிமிடம் அல்லது, 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, 10 வினாடி அல்லது, 20 வினாடி, 'ஆப் ஸ்கிரீன்' என, 'பிரேக்' விட வேண்டும். இதை, வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள் வலியுறுத்த வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
27-ஜன-202208:43:40 IST Report Abuse
Lion Drsekar இதைவிட மிகப் பெரிய ஆபத்துக்கள் இருக்கிறது கடந்த ஐம்பது ஆண்டுகளாக கூறிவருகிறேன் புத்தக சுமை முதுகெலும்பை பாதிக்கும் என்று யாரும் செவி சாய்க்கவில்லை, அதே போன்று கரும்பலகையில் எழுதும்போது பறக்கும் சாக் துகள்கள் ஆசியர்பெருமக்கள் மற்றும் முன்னாள் அமர்ந்து இருக்கும் குழந்தைகளுக்கு நுரையீரல்களுக்குள் சென்று பல நோய்களை உருவாக்கும் எத்தினை செய்திகளை கூறிவருகிறேன் அப்போது எனக்கு நம் தினமலர் பகுதிக்கு இதுபோன்ற செய்தி அனுப்பும் வசதி இல்லாததால் வழிதெரியாமல் இருந்தேன், தற்போது தினமலருக்கு நன்றி, இதுபோன்று நாட்டு நலன் மற்றும் மக்களின் நலனுக்காக நல்ல தரமான செய்திகளை வெளியிட்டு மக்களை நல்வழிப்படுத்துகிறது, வந்தே மாதரம்
Rate this:
Cancel
Vijayalakshmanan S - CHENNAI,இந்தியா
26-ஜன-202214:58:46 IST Report Abuse
Vijayalakshmanan S இந்த கருத்து முக்கியமானது. எனவே இதற்கு மடிப்பு அளித்து கல்வி கர்ப்பித்து மாணவரின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும். இதில் பெற்றோரின் கவனமும் அவசியம் தேவை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X