தடப்பள்ளி வாய்க்காலில் குளித்த சிறுவன் பலி

Added : ஜன 26, 2022
Advertisement
கோபி: தடப்பள்ளி வாய்க்காலில் மூழ்கி, 14 வயது சிறுவன் பலியானார். கோபி அருகே காசிபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் சக்திவேல், 14; அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தார். நேற்று மதியம் அதே பகுதியில் உள்ள தடப்பள்ளி வாய்க்காலில், நண்பர்கள் சிலருடன் குளித்தார். நீச்சல் தெரியாமல் எதிர்பாராத விதமாக சக்திவேல் மூழ்கினார். கோபி தீயணைப்பு துறையினர் சக்திவேலை தேடும்

கோபி: தடப்பள்ளி வாய்க்காலில் மூழ்கி, 14 வயது சிறுவன் பலியானார். கோபி அருகே காசிபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் சக்திவேல், 14; அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தார். நேற்று மதியம் அதே பகுதியில் உள்ள தடப்பள்ளி வாய்க்காலில், நண்பர்கள் சிலருடன் குளித்தார். நீச்சல் தெரியாமல் எதிர்பாராத விதமாக சக்திவேல் மூழ்கினார். கோபி தீயணைப்பு துறையினர் சக்திவேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். மாலை, 5:30 மணிக்கு சக்திவேல் உடலை மீட்டனர். கடத்தூர் போலீசார் உடலை மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சுப்பிரமணி புகாரின்படி, கடத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X