சேலம்: சேலம் மாவட்டத்தில் நேற்று, 1,087 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதில், சேலம் மாநகராட்சியில், 435 பேர், கொளத்தூர், மேச்சேரி தலா, 45, ஓமலூர், 41, வீரபாண்டி, 38, தாரமங்கலம், 35, சேலம் ஒன்றியம், 25, சங்ககிரி, அயோத்தியாப்பட்டணம் தலா, 22, இடைப்பாடி, 21, ஆத்தூர், பனமரத்துப்பட்டி தலா, 19, கொங்கணாபுரம், தலைவாசல் தலா, 18, பெத்தநாயக்கன்பாளையம், 16, வாழப்பாடி, 15, மகுடஞ்சாவடி, 14, கெங்கவல்லி, 11, காடையாம்பட்டி, 8, நங்கவள்ளி, 6, ஆத்தூர் நகராட்சி, 5, நரசிங்கபுரம் நகராட்சி, 3, ஏற்காடு, 2 என, சேலம் மாவட்டத்தினர், 883 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர, நாமக்கல், திருப்பூர் தலா, 21 பேர், காஞ்சிபுரம், 16, வேலூர், சென்னை தலா, 15, ஈரோடு, கடலூர், மதுரை தலா, 14, கோவை, கரூர் தலா, 13, தர்மபுரி, 10, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி தலா, 9, திருச்சி, 7, கிருஷ்ணகிரி, 5, ஓசூர், 4, வெளி மாவட்டத்தினர், 200 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. அத்துடன், ஜார்க்கண்ட், கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிராவை சேர்ந்த தலா ஒருவர் என, 4 பேருக்கு உறுதியானது. ஒட்டுமொத்தமாக சேலம் மாவட்டத்தில், 1,087 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இது, கடந்த, 21ல், 1,009 பேர், 22ல், 1,080 பேர், 23ல், 1,074 பேர், நேற்று முன்தினம், 1,089 பேர், நேற்று, 1,087 பேர் என, ஐந்து நாளாக, தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
10 போலீசாருக்கு உறுதி: சேலம் உருக்காலை நிறுவனத்தில், 7 பணியாளருக்கு தொற்று உறுதியாகி சிகிச்சையில் உள்ளனர். அதேபோல், ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், இரு ஏட்டுகள், ஒரு டிரைவருக்கு கொரோனா உறுதியானது. இதுதவிர, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., காய்ச்சல், சளியால் தனிமைப்படுத்திக்கொண்டனர். கொளத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் எஸ்.ஐ., உள்பட இரு போலீசாருக்கு கொரோனா உறுதியாக, இருவரும் தனிமைப்படுத்தி கொண்டனர். கொங்கணாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் ஐந்து போலீசாருக்கு நேற்று கொரோனா உறுதியாக, அவரவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டனர். இந்த ஸ்டேஷனில், ஏற்கனவே எஸ்.எஸ்.ஐ., உள்பட, 4 போலீசார் பாதிக்கப்பட்டு தனிமையில் உள்ளனர். இதுவரை, 9 போலீசாருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
கருப்பூரில் சிகிச்சை மையம்: சேலம் அரசு மருத்துமவனையை தொடர்ந்து, கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி, பெரியார் பல்கலை வளாகத்தில், 500 படுக்கை வசதி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி ஓமலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், அதற்கான பணி தொடங்கி, தற்போது தயாராக உள்ளது. ஓரிரு நாட்களில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் பணி தொடங்கும் என, மருத்துவர்கள் கூறினர்.
நாளை 'பூஸ்டர்' தடுப்பூசி: சேலம் மாவட்டத்தில், நேற்று வரை, 11 ஆயிரத்து, 500 பேர், 'பூஸ்டர்' தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். மேம்படுத்தப்பட்ட, 20 ஆரம்ப சுகாதார நிலையம், மேட்டூரில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில், நாளை, 'பூஸ்டர்' தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE