சேலம்: தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, அரசு அலுவலகங்களில் வாக்காளர் உறுதிமொழி ஏற்க, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில், மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ் தலைமையில் அலுவலர்கள், பணியாளர்கள், நேற்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதில், 'தேர்தல் கண்ணியத்தை நிலை நிறுத்த, எந்த தூண்டுதலின்றி ஓட்டுப்போடுவோம்' என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதேபோல், வீரபாண்டி ஒன்றிய அலுவலகத்தில் கமிஷனர் அன்புராஜன், பி.டி.ஓ., தமிழ்செல்வன்(கி.ஊ.,) தலைமையில் ஊழியர்கள், 'கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, தேர்தலை நடத்த அனைத்து முயற்சிகளையும் செய்வோம்' என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த கல்லேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியை அமுதா தலைமையிலும், கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமையிலும், சங்ககிரி, தேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அய்யாசாமி தலைமையிலும் ஆசிரியர்கள் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதேபோல், மாவட்டம் முழுதும் அனைத்து அரசு அலுவலங்களில், தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை, ஊழியர்கள் எடுத்துக் கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE