கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் மரணம்: போலீஸ் மரியாதையுடன் உடல் அடக்கம்

Added : ஜன 26, 2022
Advertisement
சேலம்: சேலத்தில் உடல்நலக்குறைவால் இறந்த, கன்னியாகுமரி இன்ஸ்பெக்டரின் உடல், போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.சேலம், கன்னங்குறிச்சி, பாண்டியன் தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன், 57. சேலம் மாநகர், மாவட்டம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பணிபுரிந்தவர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை ஸ்டேஷனுக்கு

சேலம்: சேலத்தில் உடல்நலக்குறைவால் இறந்த, கன்னியாகுமரி இன்ஸ்பெக்டரின் உடல், போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

சேலம், கன்னங்குறிச்சி, பாண்டியன் தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன், 57. சேலம் மாநகர், மாவட்டம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பணிபுரிந்தவர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார். இதனால், மருத்துவ விடுப்பில் சென்ற அவர், கடந்த டிசம்பரில் பணியில் இணைந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டதால், ஜன., 5ல், சேலம் வந்த அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது உடலுக்கு அதிகாரிகள், போலீசார், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நேற்று, போலீஸ் மரியாதையுடன் அவரது உடல், எருமாபாளையத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X