சேலம்: சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில், 10ம் வகுப்பில் தேர்ச்சி அல்லது தோல்வி, அதற்கு மேலான கல்வி தகுதிகளை பெற்றவர், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, தொடர்ந்து ஐந்தாண்டு புதுப்பித்து நிறைவடைந்த பின், வேலையின்றி காத்திருக்கும் இளைஞர்கள் பதிவு செய்து, ஓராண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்குகிறது. இத்திட்டத்தில் பயன்பெற, மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம், 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மனுதாரர், 45 வயதுக்குள், இதர பிரிவினர், 40 வயதுக்குள் இருக்க வேண்டும். 10ம் வகுப்பு தோல்விக்கு மாதம், 200 ரூபாய், தேர்ச்சி பெற்றவருக்கு, 300 ரூபாய், மேல்நிலை கல்வி தேர்ச்சிக்கு, 400 ரூபாய், பட்டப்படிப்பு தேர்ச்சி, 600, மாற்றுத்திறனாளி, 10ம் வகுப்பு தேர்ச்சி, தோல்விக்கு தலா, 600, மேல்நிலை கல்வி தேர்ச்சி, 750 ரூபாய், பட்டப்படிப்பு தேர்ச்சி, 1,000 ரூபாய் உண்டு. உதவி தொகை விண்ணப்ப படிவம் பெற, வேலை வாய்ப்பு அடையாள அட்டையை காட்டி, சேலம் மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அனைத்து வேலை நாளிலும் பெறலாம். தவிர, www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, மீண்டும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE