வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: ஜன.,30 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

Updated : ஜன 26, 2022 | Added : ஜன 26, 2022
Advertisement
சென்னை: தமிழகத்தின் உள்மாவட்டங்களில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக ஜன.,30 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உள் மாவட்டங்களில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகஜன.,26,27கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி,
தமிழகம், மழை, சென்னை வானிலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தமிழகத்தின் உள்மாவட்டங்களில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக ஜன.,30 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.



இது தொடர்பாக சென்னை வானிலை மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உள் மாவட்டங்களில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக


ஜன.,26,27


கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்களான ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்


ஜன.,28


தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.


latest tamil news




ஜன.,29, 30


தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.


சென்னையை பொறுத்தவரை


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.


latest tamil news


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் தென்காசி மாவட்டம் சிவகிரி, மதுரை மாவட்டம் மேலூரில் தலா 3 செ.மீ., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தலா 1 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை




ஜன.,28, 29


மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X