பழங்குடியினர் உரிமையை பெற காந்தி சிலைக்கு மனு அளித்து உண்ணாவிரதம்

Added : ஜன 26, 2022 | கருத்துகள் (1)
Advertisement
ஊட்டி: நீலகிரியில் ஆண்டாண்டு காலம் வாழ்ந்து வரும் படுகரின மக்கள், 1941ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, படுக சமுதாயம் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். சுதந்திரத்திற்கு பின், 1951ம் ஆண்டு முதல் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர். பழங்குடியினர் பட்டியலில் மீண்டும் சேர்க்க கோரி படுக சமுதாய மக்கள் 75 ஆண்டுக்கு மேலாக பல கட்ட போராட்டங்கள் நடத்தியும்

ஊட்டி: நீலகிரியில் ஆண்டாண்டு காலம் வாழ்ந்து வரும் படுகரின மக்கள், 1941ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, படுக சமுதாயம் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். சுதந்திரத்திற்கு பின், 1951ம் ஆண்டு முதல் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர். பழங்குடியினர் பட்டியலில் மீண்டும் சேர்க்க கோரி படுக சமுதாய மக்கள் 75 ஆண்டுக்கு மேலாக பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

இந்நிலையில், நீலகிரி படுக தேச பார்ட்டி சார்பில் தலைவர் மஞ்சை மோகன் தலைமையில், இன்று குடியரசு தினத்தில் சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு கட்சி நிர்வாகிகளுடன் கோரிக்கை மனு அளித்து, சிலை முன்பு, உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதத்திற்கு அனுமதியில்லாததால், கட்சி நிர்வாகிகள், 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
27-ஜன-202209:28:29 IST Report Abuse
Lion Drsekar பழங்குடியினர் மட்டும் இல்லை எல்லா இடங்களிலும் அப்படிதான் இருக்கிறது . சிலர் கோவில்களுக்கு சென்று குறைகளை கூறுகிறார்கள், வேண்டுகிறார்கள், சிலர் இதுபோன்று செயல்படுகிறார்கள், விவரம் தெரிந்தவர்கள் குறுநில மன்னர்களை அணுகி தேவையை பூர்த்தி செய்துகொள்கிறார்கள், உங்கள் மக்கள் தொகை அதிகமாக இருக்கவேண்டும், வாக்கு வங்கியாக இருக்கவேண்டும், பிறகு எல்லாமே உங்களைத்தேடி வரும், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X