மாணவி வாக்குமூலம் பதிவான மொபைல் போன் ஒப்படைப்பு

Added : ஜன 26, 2022
Advertisement
தஞ்சாவூர்: பள்ளி மாணவி இறப்பதற்கு முன், மதமாற்றம் குறித்து கூறியதாக வெளியான வீடியோவை பதிவு செய்தவர், நேற்று வல்லம் டி.எஸ்.பி., அலுவலகத்தில் ஆஜராகி, மொபைல் போனை ஒப்படைத்தார்.தஞ்சாவூர் அருகே, மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த அரியலூரை சேர்ந்த 17 வயது மாணவி, பூச்சிக்கொல்லி மருந்து குடித்து கடந்த 19ம் தேதி இறந்தார். திருக்காட்டுப்பள்ளி போலீசார், விடுதி

தஞ்சாவூர்: பள்ளி மாணவி இறப்பதற்கு முன், மதமாற்றம் குறித்து கூறியதாக வெளியான வீடியோவை பதிவு செய்தவர், நேற்று வல்லம் டி.எஸ்.பி., அலுவலகத்தில் ஆஜராகி, மொபைல் போனை ஒப்படைத்தார்.

தஞ்சாவூர் அருகே, மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த அரியலூரை சேர்ந்த 17 வயது மாணவி, பூச்சிக்கொல்லி மருந்து குடித்து கடந்த 19ம் தேதி இறந்தார். திருக்காட்டுப்பள்ளி போலீசார், விடுதி வார்டன் சகாயமேரியை கைது செய்தனர். கிறிஸ்துவ மதத்திற்கு மாறுமாறு விடுதியில் வலியுறுத்தியதாக, மாணவி தெரிவித்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது. இது குறித்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'மாணவி கூறியதை மொபைல் போனில் பதிவு செய்த முத்துவேல், மொபைல் போனுடன், வல்லம் டி.எஸ்.பி., பிருந்தா முன்னிலையில் ஆஜராக வேண்டும்' என உத்தரவிட்டார். மாணவி வாக்குமூலத்தை வீடியோவில் பதிவு செய்த, அரியலூர் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் செயலர் முத்துவேல், நேற்று வல்லம் டி.எஸ்.பி., அலுவலகத்தில் ஆஜராகி, தன் மொபைல் போனை ஒப்படைத்தார். அவரிடம் டி.எஸ்.பி., பிருந்தா 30 நிமிடங்கள் விசாரணை நடத்தினார். மேலும், மாணவியின் பெற்றோரிடம் தனித்தனியாக, தலா ஒரு மணி நேரம் எழுத்துபூர்வமாகவும், வீடியோ பதிவு மூலமாகவும் வாக்குமூலம் பெறப்பட்டது. ஆஜரான முத்துவேல், மாணவியின் பெற்றோருடன், பா.ஜ., நிர்வாகிகள் பலர் வந்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X