நூல் விலையேற்றத்தை கட்டுப்படுத்த எம்.பி., கோரிக்கை

Added : ஜன 26, 2022
Advertisement
ஈரோடு: நூல் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் எனக்கோரி, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு, திருப்பூர் எம்.பி., சுப்பராயன் கடிதம் அனுப்பினார்.கடிதத்தில் அவர் கூறியதாவது: நூல் விலை உயர்வு காரணமாக, திருப்பூரில் ஜவுளித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் இயங்கும், 90 சதவீத நிறுவனங்கள் சிறு மற்றும் குறு நிறுவனங்களாகும். அவற்றில், 80 சதவீத

ஈரோடு: நூல் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் எனக்கோரி, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு, திருப்பூர் எம்.பி., சுப்பராயன் கடிதம் அனுப்பினார்.

கடிதத்தில் அவர் கூறியதாவது: நூல் விலை உயர்வு காரணமாக, திருப்பூரில் ஜவுளித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் இயங்கும், 90 சதவீத நிறுவனங்கள் சிறு மற்றும் குறு நிறுவனங்களாகும். அவற்றில், 80 சதவீத நிறுவனங்கள் நூல் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் மூடப்பட்டு வருகின்றன. இதனால், இத்தொழில் சார்ந்த துணை, உப தொழில்கள் முடங்கி வருகின்றன. இதனால், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வருவாய் இழப்பு, வேலை இழப்பு ஆகியவற்றை ஒட்டு மொத்த விளைவும், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது. ஓராண்டில் நூல் விலை, 200 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. குறிப்பாக, சீனா, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகள், இந்தியாவைவிட குறைவான விலைக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனை செய்ய தயாராக உள்ள நிலையில், இந்தியாவில் கடும் நூல் விலை ஏற்றத்தால் ஆடை ஏற்றுமதி வர்த்தகம் செய்ய இயலாமல் போய் கொண்டிருக்கிறது.எனவே நூல் விலை உயர்வை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகிறது. விலை உயர்வுக்கு பதுக்கல் முக்கிய காரணமாகும். நூல் மற்றும் பஞ்சு பதுக்கலில் ஈடுபடும் நபர்களையும், நிறுவனங்களையும் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X