ஈரோடு: ஈரோட்டில் போலி காசோலை தயாரித்து, 6.60 கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்ற, தனியார் வங்கி செக்யூரிட்டியை, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு, ரங்கம்பாளையம் ஜீவா நகரை சேர்ந்தவர் சதீஷ், 46; தனியார் வங்கி செக்யூரிட்டி. ஈரோட்டில் உள்ள ஸ்டேட் வங்கி பிரதான கிளையில் கணக்கு வைத்துள்ளார். கடந்தாண்டு செப்., மாதம், வங்கியில் ஒரு காசோலை வழங்கி, கணக்கில் சேர்க்கும்படி கூறினார். ஒரு மும்பை நிறுவனம் சதீஷ் பெயரை குறிப்பிட்டு, ஆறு கோடியே, 60 லட்சம் ரூபாய் வழங்கும்படி குறிப்பிடப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த வங்கி அதிகாரிகள், மும்பை நிறுவனத்தை தொடர்பு கொண்டனர். சதீஷ் என்ற பெயரில் காசோலை வழங்கவில்லை என்று கூறவே, ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., அண்ணாதுரையிடம், வங்கி தரப்பில் புகார் தரப்பட்டது. இதையடுத்து ஈரோடு, தெப்பக்குளம் வீதியில், சதீஷ் செக்யூரிட்டியாக பணியாற்றும் தனியார் வங்கிக்கு, போலீசார் நேற்று சென்று விசாரித்தனர். வங்கியில் போலி காசோலை அளித்து, மோசடி செய்ய முயன்றதை சதீஷ் ஒப்புக் கொள்ளவே, அவரை கைது செய்தனர். இதில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்று, அவரிடம் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE