திருச்செங்கோட்டில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை

Added : ஜன 26, 2022
Advertisement
திருச்செங்கோடு: ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, மகள் மூன்று பேரும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது, திருச்செங்கோட்டில் பெரும் சோகத்தை உள்ளது.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த குமாரமங்கலம் கோயக்காட்டை சேர்ந்த விசைத்தறி அதிபர் வெங்கடாசலம், 55. அவரது மனைவி நீலாம்பாள், 50. தம்பதியருக்கு இரு மகள்கள் உள்ளனர். அதில், மூத்த மகள் பிரீத்தி, திருமணமாகி,

திருச்செங்கோடு: ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, மகள் மூன்று பேரும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது, திருச்செங்கோட்டில் பெரும் சோகத்தை உள்ளது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த குமாரமங்கலம் கோயக்காட்டை சேர்ந்த விசைத்தறி அதிபர் வெங்கடாசலம், 55. அவரது மனைவி நீலாம்பாள், 50. தம்பதியருக்கு இரு மகள்கள் உள்ளனர். அதில், மூத்த மகள் பிரீத்தி, திருமணமாகி, ராசிபுரத்தில் வசித்து வருகிறார். அவர், நேற்று மாலை, 6:00 மணிக்கு, தந்தை வெங்கடாஜலத்தை மொபைல் போனில் தொடர்பு கொண்டுள்ளார். நீண்ட நேரமாக எடுக்கவில்லை. சந்தேகம் அடைந்த அவர், உறவினருக்கு தகவல் தெரிவித்து, வீட்டுக்கு சென்று பார்க்க சொல்லி உள்ளார். உறவினர் ஒருவர் வீட்டுக்கு சென்று பார்த்த போது, வீடு உள்பக்கமாக சாத்தப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது, வெங்கடாஜலம், அவரது மனைவி நீலாம்பாள் இருவரும், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். திருச்செங்கோடு ரூரல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கூடுதல் எஸ்.பி., மணிமாறன், டி.எஸ்.பி., சீனிவாசன், இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார், வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றனர். வெங்கடாஜலம், நீலாம்பாள் இருவரும், மாடிப்படி வழித்தடத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்திருந்தனர். 17 வயது இளைய மகள் மொட்டை மாடியில் குளியல் அறையில், தூக்குமாட்டி இறந்து கிடந்தார். மூவரின் உடலை கைப்பற்றிய போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டவதிற்கு, கடன் பிரச்னையா, வேறு ஏதாவது காரணமாக என்பது குறித்து, திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். மூன்று பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X