அ.தி.மு.க., பெண் கவுன்சிலர் வீடியோ வெளியீடால் திருப்பம்

Added : ஜன 26, 2022
Advertisement
பனமரத்துப்பட்டி: ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறிய விவகாரத்தில், அ.தி.மு.க., பெண் கவுன்சிலர், அக்கட்சியினரே மிரட்டியதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.அ.தி.மு.க.,வை சேர்ந்த, பனமரத்துப்பட்டி ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன் மீது தி.மு.க.,வினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அதில், அ.தி.மு.க.,வை சேர்ந்த இரு பெண் கவுன்சிலர்கள் கையெழுத்திட,

பனமரத்துப்பட்டி: ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறிய விவகாரத்தில், அ.தி.மு.க., பெண் கவுன்சிலர், அக்கட்சியினரே மிரட்டியதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

அ.தி.மு.க.,வை சேர்ந்த, பனமரத்துப்பட்டி ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன் மீது தி.மு.க.,வினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அதில், அ.தி.மு.க.,வை சேர்ந்த இரு பெண் கவுன்சிலர்கள் கையெழுத்திட, அத்தீர்மானம் நிறைவேறியது. இதனால், அந்த கவுன்சிலர்களை, தி.மு.க.,வினர் மிரட்டியதாக கூறி, சேலத்தில், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர் தர்ணாவில் ஈடுபட்டனர். இந்நிலையில், தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்பட்ட பெண் கவுன்சிலர்களில் ஒருவரான பூங்கொடி, நேற்று, 'வீடியோ' வெளியிட்டார். அதில், 'தி.மு.க.,வினர் மிரட்டவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையெழுத்து போட்டதால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஒன்றிய செயலர்கள் மிரட்டினர். அவர்களால் ஆபத்து ஏற்பட்டுள்ளது' என, தெரிவித்துள்ளார். இதுகுறித்து, 5வது வார்டு அ.தி.மு.க.,வினர் கூறுகையில், 'அ.தி.மு.க., சின்னத்தில் வெற்றி பெற்ற கவுன்சிலர், தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்படுகிறார். அவர், அணி மாறியது உறுதியாகியுள்ளது. அவர், கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X