ஓமலூர்: மொழிப்போர் தியாகிகளின் உருவ படத்துக்கு, முன்னாள் முதல்வர் பழனிசாமி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது உயிர்நீத்த, மொழிப்போர் தியாகிகளின் தியாகங்களை நினைவு கூறும்படி, ஜன., 25ல் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்படி, சேலம் மாவட்டம், ஓமலூர், கோட்டமேட்டுப்பட்டியில் உள்ள, அ.தி.மு.க., புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில், வீர வணக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஓமலூர் எம்.எல்.ஏ., மணி தலைமை வகித்தார். அதில், முன்னாள் முதல்வர், அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, தியாகிகளின் உருவ படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகளுடன், முன்னாள் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அதில், எம்.எல்.ஏ.,க்கள் சித்ரா, ஜெயசங்கரன், சுந்தரராஜன், நல்லதம்பி, ராஜமுத்து, சேலம் சேகோசர்வ் சேர்மன் தமிழ்மணி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் வெற்றிவேல், கிருஷ்ணன், ஒன்றிய செயலர்கள், நகர செயலர்கள், கட்சியினர் பங்கேற்றனர்.
பேனர் அகற்றம்: வீர வணக்கு நிகழ்ச்சிக்கு, அலுவலக நுழைவாயில் முன் இருபுறமும் மொழிப்போர் தியாகிகளின் படத்துடன், கட்சி நிர்வாகிகளின் படங்கள், பெயர்கள் அச்சிடப்பட்டு பேனர் கட்டப்பட்டிருந்தன. பழனிசாமி வரும் முன், அந்த பேனர்களை கட்சியினர் அப்புறப்படுத்தினர். அஞ்சலி நிகழ்ச்சியில், ஆடம்பரமாக பேனராக தெரிந்ததால், அகற்றப்பட்டதாக கட்சியினர் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE