நுழைவு வரி ஒரு மாதம் பாக்கி: பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ்சுக்கு தடை

Added : ஜன 26, 2022
Advertisement
பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடி அரசு போக்குவரத்து கழக பணிமனையில், 40க்கும் மேற்பட்ட நகர, புறநகர் அரசு பஸ்கள் இயங்குகின்றன. இவை பொம்மிடி பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்ல வேண்டும். அவ்வாறு வந்து செல்லும் அனைத்து பஸ்களுக்கும், பஸ் ஸ்டாண்ட் நுழைவு கட்டணமாக, ஒரு பஸ்சுக்கு, எட்டு ரூபாய் கட்டணம் ?செலுத்த வேண்டும். தனியார் பஸ்கள் அனைத்தும் செலுத்தியதால் நேற்று அவை மட்டுமே பஸ்

பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடி அரசு போக்குவரத்து கழக பணிமனையில், 40க்கும் மேற்பட்ட நகர, புறநகர் அரசு பஸ்கள் இயங்குகின்றன. இவை பொம்மிடி பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்ல வேண்டும். அவ்வாறு வந்து செல்லும் அனைத்து பஸ்களுக்கும், பஸ் ஸ்டாண்ட் நுழைவு கட்டணமாக, ஒரு பஸ்சுக்கு, எட்டு ரூபாய் கட்டணம் ?செலுத்த வேண்டும். தனியார் பஸ்கள் அனைத்தும் செலுத்தியதால் நேற்று அவை மட்டுமே பஸ் ஸ்டாண்டிற்குள் அனுமதிக்கப்பட்டன. கடந்த ஒரு மாதமாக அரசு பஸ்களுக்கு கட்டணம் செலுத்தப்படாததால், ஒப்பந்ததாரர் டவுன் பஞ்.,ல் முறையிட்டார். அதன்படி டவுன் பஞ்., செயல் அலுவலர் நாகராஜன் உள்ளிட்ட அலுவலர்கள் நேரடியாக தலையிட்டு, நேற்று காலை முதல் எந்த ஒரு அரசு பஸ்சையும், பஸ் ஸ்டாண்டில் நுழைய அனுமதிக்கவில்லை. இதனால், பயணிகள் ரோட்டிலேயே இறக்கி விடப்பட்டனர். இதையடுத்து மாலை, 5:00 மணிக்கு அரசு போக்குவரத்து கழக நிர்வாகம், பணம் செலுத்திய பிறகு, அனைத்து அரசு பஸ்களும், பஸ் ஸ்டாண்டிற்கு நுழைய அனுமதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X