கொரோனா கட்டுப்பாடுகளை மறந்த மக்கள்; கண்டு கொள்ளாத கிருஷ்ணகிரி நகராட்சி

Added : ஜன 26, 2022
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கொரோனா மூன்றாவது அலை வேகம் எடுத்துள்ளது. நாளொன்றுக்கு, 1,000 பேர் வரை தொற்று பாதிப்புக்கு ஆளாகின்றனர். தமிழக அரசு இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கும் அமல்படுத்தியும், பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வரும்போது முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கொரோனா மூன்றாவது அலை வேகம் எடுத்துள்ளது. நாளொன்றுக்கு, 1,000 பேர் வரை தொற்று பாதிப்புக்கு ஆளாகின்றனர். தமிழக அரசு இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கும் அமல்படுத்தியும், பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வரும்போது முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான இடங்களில் அரசின் இந்த கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றுவதில்லை. கிருஷ்ணகிரி நகரின் முக்கிய பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் முக கவசம் இல்லாமலும், கும்பலாகவும் செல்கின்றனர். கிருஷ்ணகிரி நகரிலுள்ள வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் முக கவசமின்றி சென்று வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி நகராட்சி நிர்வாகம் கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிப்பதில் அலட்சியத்துடன் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி, முக கவசம் அணியாமலும், கூட்டமாகவும் செல்லும் மக்களை நிறுத்தி, அவர்களை எச்சரித்து அபராதம் விதிப்பது; நகரின் முக்கிய வீதிகளிலுள்ள கடைகளுக்கு சென்று, கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்வது; கிருமிநாசினி தெளிப்பது போன்ற பணிகளை செய்யவில்லை எனவும், மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X