தேசிய வாக்காளர் தின உறுதிமொழி

Added : ஜன 26, 2022
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலை, புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.* தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்,

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலை, புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
* தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமையில் நேற்று, 12வது தேசிய வாக்காளர் உறுதி தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து, வாக்காளர் சுருக்க, திருத்த பணிகளை சிறப்பாக மேற்கொண்ட, ஏழு ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு அவர்


நற்சான்றிதழ் வழங்கினார்.


* பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை கல்லூரியில், தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு விழா கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது.


* பென்னாகரத்தை அடுத்த சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலுள்ள ஓட்டுச்சாவடி மையத்தில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.


* காரிமங்கலம் பி.டி.ஓ., அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.


*தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் குருநாதன் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X