வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு, இன்று மாலை 6:30 மணிக்கு வெளியாகும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஜனவரி 27ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டுமென்று, மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தேர்தலை பல்வேறு காரணங்களால் நடத்த முடியாத பட்சத்தில், அதற்குள் தேர்தல் அறிவிப்பையாவது வெளியிட வேண்டுமென்று மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருந்தது. தேர்தலை நடத்தவும் ஆயத்த நிலையில் உள்ளது.

இதற்கிடையில், தமிழகத்தில் கொரோனா பரவலைக் காரணம் காட்டி, தாக்கலான பொதுநலமனுவை தள்ளுபடி செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம்கோர்ட், 'நகர்ப்புற தேர்தலை நடத்த தடையில்லை' என்று தெளிவாக உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில், நாளை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டிய நிலையில், இன்று மாலை 6:30 மணிக்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தேர்தல் அறிவிப்பை வெளியிடுகிறார். வரும் பிப்.20க்குள் ஒரே கட்டமாக தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE