வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லடாக்: லடாக் எல்லையில் 15 ஆயிரம் அடி உயரத்தில் இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மைனஸ் 35 டிகிரி செல்சியஸ் குளிரில் குடியரசு தின விழாவை கொண்டாடினர்.
இந்தியாவின் 73வது குடியரசு தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. டில்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். அதேபோல், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு படையினர் குடியரசு தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

15 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள லடாக் எல்லை பகுதிகளில் இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மைனஸ் 35 டிகிரி செல்சியஸ் குளிரிலும் குடியரசு தினத்தை கொண்டாடினர். அப்போது 'பாரத் மாதா கி ஜே' என உற்சாகமாக கோஷம் போட்டனர். இது குறித்த வீடியோவையும் வெளியிட்டனர்.

உத்தர்கண்ட் மாநிலம் மனா பள்ளத்தாக்கு பகுதியில் 11 அடி உயரத்தில் குடியரசு தின விழாவை கொண்டாடிய இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 'பாரத் மாதா கி ஜே' என கோஷம் போட்டனர்.
உத்தர்கண்ட் மாநிலத்தில் 12 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள குமாண் பகுதியினம், 11 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள ஆலி பகுதியில் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் குளிரிலும் இந்தோ திபெத்திய பாதுகாப்பு படையினர் குடியரசு தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மற்றும் பாரமுல்லா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் தேசியக்கொடி ஏற்றி குடியரசு தினத்தை கொண்டாடினர்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE