சென்னை: தமிழக அரசின் 2021ம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித் துறை விருது பெறுபவர்களின் விவரங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விருது - விருதாளர்
அண்ணா விருது - நாஞ்சில் சம்பத்
மகாகவி பாரதியார் விருது - பாரதி கிருஷ்ணகுமார்
பாவேந்தர் பாரதிதாசன் விருது - புலவர் செந்தலை கவுதமன்
சொல்லின் செல்வர் விருது - சூர்யா சேவியர்
சிங்காரவேலர் விருது - மதுக்கூர் ராமலிங்கம்
தமிழ்த்தாய் விருது - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது - முனைவர் ரா.சஞ்சீவிராயர்

தேவநேயப்பாவாணர் விருது - முனைவர் கு.அரசேந்திரன்
உமறுப்புலவர் விருது - நா.மம்மது
கி.ஆ.பெ. விருது - முனைவர் ம.ராசேந்திரன்
கம்பர் விருது - பாரதி பாஸ்கர்
ஜி.யு.போப் விருது - ஏ.எஸ்.பன்னீர்செல்வம்
மறைமலையடிகள் விருது - சுகி.சிவம்
இளங்கோவடிகள் விருது - நெல்லைக் கண்ணன்
அயோத்திதாசப் பண்டிதர் விருது - ஞான.அலாய்சியஸ்
இவ்வாண்டு முதல் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தியும், ஒரு சவரன் தங்கப்பதக்கம், விருதுக்கான தகுதியுரை ஆகியன வழங்கி பொன்னாடை அணிவித்து சிறப்பிக்க பெறுவர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE