பெண்ணை தாக்கிய தம்பதி, மகன் கைது| Dinamalar

பெண்ணை தாக்கிய தம்பதி, மகன் கைது

Added : ஜன 26, 2022 | |
குளித்தலை: பொதுப்பாதை பிரச்னை காரணமாக, பெண்ணை தாக்கிய, 3 பேரை போலீசார் கைது செய்தனர். குளித்தலை அடுத்த, எழுதியாம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி ரம்யா, 29. இவருக்கும், அதே ஊரை சேர்ந்த வைரப்பெருமாள் மகன் பழனியாண்டி என்பவருக்கும் இடையே பொதுப்பாதை பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த, 20ல், மதியம் ரம்யா வீட்டிலிருந்தபோது, பழனியாண்டி, இவரது மனைவி

குளித்தலை: பொதுப்பாதை பிரச்னை காரணமாக, பெண்ணை தாக்கிய, 3 பேரை போலீசார் கைது செய்தனர். குளித்தலை அடுத்த, எழுதியாம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி ரம்யா, 29. இவருக்கும், அதே ஊரை சேர்ந்த வைரப்பெருமாள் மகன் பழனியாண்டி என்பவருக்கும் இடையே பொதுப்பாதை பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த, 20ல், மதியம் ரம்யா வீட்டிலிருந்தபோது, பழனியாண்டி, இவரது மனைவி லட்சுமி, மகன் சரவணன் ஆகிய, 3 பேரும் தகாத வார்த்தையால் திட்டி தாக்கியுள்ளனர். இதில், காயமடைந்த ரம்யா குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து, ரம்யா அளித்த புகார் படி, மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து, 3 பேரையும் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X