லாரி - பஸ் மோதி விபத்து

Added : ஜன 26, 2022 | |
Advertisement
கிருஷ்ணராயபுரம்: மகாதானபுரம் கும்ஸ் அருகே, லாரி மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானதில், பயணிகள் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கரூர் - திருச்சி நெடுஞ்சாலை, மகாதானபுரம் கும்ஸ் அருகே, வாகனங்கள் மெதுவாக செல்லும் வகையில் பேரிகார்டு அமைக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை, 2:45 மணிக்கு வைக்கோல் ஏற்றிக் கொண்டு, கரூர் நோக்கி சென்ற லாரி, முன்னால் சென்ற அரசு பஸ்

கிருஷ்ணராயபுரம்: மகாதானபுரம் கும்ஸ் அருகே, லாரி மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானதில், பயணிகள் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கரூர் - திருச்சி நெடுஞ்சாலை, மகாதானபுரம் கும்ஸ் அருகே, வாகனங்கள் மெதுவாக செல்லும் வகையில் பேரிகார்டு அமைக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை, 2:45 மணிக்கு வைக்கோல் ஏற்றிக் கொண்டு, கரூர் நோக்கி சென்ற லாரி, முன்னால் சென்ற அரசு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்போது லாரியின் பின்னால், திருப்பூர் நோக்கி வந்த அரசு பஸ் லாரி மீது மோதியது. இதில், திருப்பூர் பஸ்சில் பயணித்த, 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து, கரூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில், அனுமதிக்கப்பட்டனர். லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து, லாலாப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X