நிலம் குத்தகை பிரச்னை: 4 பேர் கைது| Dinamalar

நிலம் குத்தகை பிரச்னை: 4 பேர் கைது

Added : ஜன 26, 2022 | |
குளித்தலை: நிலம் குத்தகையில் ஏற்பட்ட பிரச்னையில், 4 பேரை போலீசார் கைது செய்தனர். குளித்தலை அடுத்த, வெள்ளப்பட்டி பஞ்., கணக்கப்பிள்ளையூரை சேர்ந்தவர் துரைசாமி, 60. இவர், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை, பொன்னம்பட்டியை சேர்ந்த வசந்தா என்பவருக்கு, 5 வருட குத்தகைக்கு விட்டார். அதில், பிரச்னை ஏற்படவே, இதுகுறித்த வழக்கு, குளித்தலை உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

குளித்தலை: நிலம் குத்தகையில் ஏற்பட்ட பிரச்னையில், 4 பேரை போலீசார் கைது செய்தனர். குளித்தலை அடுத்த, வெள்ளப்பட்டி பஞ்., கணக்கப்பிள்ளையூரை சேர்ந்தவர் துரைசாமி, 60. இவர், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை, பொன்னம்பட்டியை சேர்ந்த வசந்தா என்பவருக்கு, 5 வருட குத்தகைக்கு விட்டார். அதில், பிரச்னை ஏற்படவே, இதுகுறித்த வழக்கு, குளித்தலை உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த, 21ல் துரைசாமி தனது நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது, அங்குவந்த வசந்தா, கணவர் ஆண்டியப்பன், மல்லிகா, முருகேசன் ஆகிய, 4 பேரும் பிரச்னை செய்தனர். இதுகுறித்து, துரைசாமி கொடுத்த புகார் படி, தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து, 4 பேரையும் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X