குளித்தலை: குடும்பத்தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிய வழக்கில், 8 பேர் மீது, பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குளித்தலை அடுத்த, முள்ளிப்பாடியை சேர்ந்த சரத்குமார் மனைவி சுமதி, 30. இவர், தனது கணவருடன் கருத்து வேறுபாடால், தனியாக வசித்து வருகிறார். கடந்த ஜன., 22ல், வீட்டிலிருந்த போது, அவரது மாமியார் தங்கா மற்றும் அவரது மகன்கள் விஜயகுமார், மணி ஆகிய மூவரும் தகாத வார்த்தையால் திட்டி அடித்தனர். அப்போது இரு குடும்பத்தாரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில், காயமடைந்த சுமதி, குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து, சுமதி அளித்த புகார் படி, பாலவிடுதி போலீசார், 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல், மாமியார் தங்கா கொடுத்த புகார் படி, மருமகள் சுமதி, இவரது தந்தை கருப்பையா, தாயார் அஞ்சம்மாள், சகோதரர்கள் பாக்கியராஜ், நாகராஜ் ஆகிய, 5 பேர் மீதும், பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE