வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்தியாவின் உயரிய விருதுகளுள் ஒன்றான பத்மஸ்ரீ விருதை வாங்கப் போவதில்லை என மேற்குவங்கத்தை சேர்ந்த 90 வயதான பாடகி சந்தியா முகர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் உயரிய விருதுகளாக கருதப்படுகிறது. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, பொறியியல், அறிவியல், பொது விவகாரங்கள், வர்த்தகம், தொழில்கள், குடிமை சேவை போன்ற துறைகளில் சாதனை செய்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி 2022ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் நேற்று (ஜன.,25) அறிவிக்கப்பட்டன.

இதில், மேற்குவங்க மாநில முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. ஆனால், ‛பத்ம விருது அறிவிக்கப்பட்டது குறித்து எதுவும் தெரியாது. விருது கொடுத்தால் வாங்க மாட்டேன்' என புத்ததேவ் பட்டாச்சார்யா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மேற்குவங்கத்தை சேர்ந்த 90 வயதான பாடகி சந்தியா முகர்ஜி, தனக்கு அறிவிக்கப்பட்டுள்ள பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்துள்ளார். இது குறித்து அவரது மகள் சவுமி சென்குப்தா கூறுகையில், ‛மத்திய அரசு அதிகாரி தொலைபேசியில் அழைத்து விருது குறித்து தெரிவித்தனர். அதை ஏற்க சந்தியா மறுத்துவிட்டார். அவரைப்போன்ற ஒரு மூத்த கலைஞருக்கு, 90 வயதிற்கு பிறகு பத்மஸ்ரீ வழங்குவது அவமானகரமானது,' எனக் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE