ரயில்வே தேர்வு முறைக்கு எதிராக போராட்டம்: பீகாரில் ரயிலுக்கு தீவைப்பு

Updated : ஜன 26, 2022 | Added : ஜன 26, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
பாட்னா: ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதகர், தட்டச்சர், இளநிலை உதவி கணக்காளர் போன்ற பணியிடங்களுக்கான என்.டி.பி.சி., தேர்வை இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கயா நிலையத்தில் ரயில் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டது. ரயில்வே தேர்வு வாரியம் என்.டி.பி.சி., தேர்வை கடந்த ஆண்டு நடத்தியது. சுமார் 35 ஆயிரம் பணியிடங்களுக்கான
Railway Exam, NTPC, Train Fire, Incident, Railway Minister, Appeals Students, ரயில்வே தேர்வு, முடிவுகள், மாணவர்கள், போராட்டம், ரயில், தீ வைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பாட்னா: ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதகர், தட்டச்சர், இளநிலை உதவி கணக்காளர் போன்ற பணியிடங்களுக்கான என்.டி.பி.சி., தேர்வை இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கயா நிலையத்தில் ரயில் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டது.

ரயில்வே தேர்வு வாரியம் என்.டி.பி.சி., தேர்வை கடந்த ஆண்டு நடத்தியது. சுமார் 35 ஆயிரம் பணியிடங்களுக்கான தேர்வை 60 லட்சம் பேர் எழுதினர். அதன் முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. அதில் இரண்டாம் கட்ட தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் என கூறப்பட்டது. இதனை தேர்வு அறிவிப்பாணையில் குறிப்பிடவில்லை, தற்போது இளைஞர்களின் எதிர்காலத்துடன் ரயில்வே துறை விளையாடுகிறது என இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் ரயில்வே தேர்வு வாரியம், அறிவிப்பாணையிலேயே 2 கட்ட தேர்வு இருப்பதை குறிப்பிட்டுள்ளதாக கூறுகிறது.


latest tamil news


இந்த இரண்டாம் கட்ட தேர்வை எதிர்த்து கடந்த சில நாட்களாக பீகார், உ.பி., ஆகிய மாநிலங்களில் இளைஞர்கள் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பீகார் மாநிலம் கயா ரயில் நிலையத்தில் இளைஞர்கள் திரண்டு கலவரத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த பயணிகள் ரயிலுக்கு தீ வைத்தனர். மேலும் ரயில் நிலையம் மீது கற்களை வீசி தாக்கினர். இதனைத் தொடர்ந்து தேர்வை ரத்து செய்வதாக ரயில்வே துறை அறிவித்தது. மேலும் கலவரங்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்த பின், அவர்களுக்கு ரயில்வே தேர்வுகளில் பங்கேற்க வாழ்நாள் தடை விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. தேர்வு தொடர்பான புகார்கள், குறைகளை வழங்க கமிட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.


latest tamil newsAdvertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
27-ஜன-202218:10:34 IST Report Abuse
pradeesh parthasarathy புரட்சி வெல்லட்டும் ....
Rate this:
Cancel
27-ஜன-202211:04:08 IST Report Abuse
பாமரன் ...😜
Rate this:
Cancel
Thirumal Kumaresan - singapore,சிங்கப்பூர்
27-ஜன-202209:51:53 IST Report Abuse
Thirumal Kumaresan தீ வைத்தவனை தீயில் இடடே தண்டனை வழங்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X