சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு பிப். 19-ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என இன்று மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்தார். அவர் கூறியது, இத்தேர்தலில் மொத்தம் 2 கோடி 79 லட்சத்து 56 ஆயிரத்து 754 பேர் ஓட்டளிக்கின்றனர். சென்னையில் மட்டும் 63 லட்சத்து 18 ஆயிரத்து 734 பேர் ஓட்டளிக்கின்றனர்.

மறைமுக தேர்தல் மூலம் தேர்வு
21
மாநகராட்சிகளுக்கு மேயர் , துணை மேயர், மற்றும் 138 நகராட்சிகளுக்கான
தலைவர், துணை தலைவர் தேர்வு மார்ச் 4-ம் தேதி மறைமுக தேர்தல் மூலம்
நடைபெறும். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
பொது மக்கள் மாலை 5 மணி வரை வாக்களிக்கலாம். கோவிட் பாதிக்கப்பட்டவர்கள்
மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்கலாம். மின்னணு ஓட்டுப்பதிவு
இயந்திரங்கள் தேர்தலில் பயன்படுத்தப்படும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெப்பமானி, முகக்கவசம் உள்ளிட்ட 13 உபகரணங்கள் ஓட்டுச்சாவடியில் பயன்படுத்தப்படும்.
பதற்றமான
வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும். சி.சி.டி.வி.
மூலம் கண்காணிக்கப்படும். துணை ராணுவபடையினரை தேர்தல் பணியில் ஈடுபடுத்தும்
எண்ணம் இல்லை. மாநில போலீசாரே பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். பதற்றம்
நிறைந்த வாக்குச்சாவடிகள் பறக்கும்படையினர் விவரங்கள் நாளை
அறிவிக்கப்படும்.
பேரணிக்கு தடை
தேர்தலின்
போது தெரு முனை பிரச்சாரம், பேரணி , சைக்கிள் பேரணி போன்றவற்றிற்கு
அனுமதி இல்லை. உள் அரங்கு கூட்டத்திற்கு 100 பேர் மட்டுமே
அனுமதிக்கப்படுவர்.649 அதிகாரிகள் 1,644 உதவி அலுவலர்கள் மற்றும் வாக்குசாவடிகளில் 1.33 லட்சம் அலுவலர்கள் வாக்கு பதிவு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னையில் மட்டும் 5,794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE