வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அமராவதி: ஆந்திராவில் ஸ்ரீ சத்யசாய், என்.டி.ஆர். , ஓய்.எஸ்.ஆர்., உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அண்டை மாநிலமான ஆந்திராவில் தற்போது வரையில் 13 மாவட்டங்கள் உள்ளன. இம்மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்று குடியரசு தினத்தையொட்டி ஆந்திரா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநிலத்தில் மொத்தம் உள்ள 13 மாவட்டங்களை 26 மாவட்டங்களாக பிரித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இவற்றில் புட்டபர்த்தியில் பிறந்த பகவான் சாய் பாபா நினைவாக அனந்தபூர் மாவட்டத்தை இரண்டாக பிரிக்கப்பட்டு புட்டபர்த்தியை தலைமையிடமாக கொண்டு ஸ்ரீசத்ய சாய் என்ற பெயரில் புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இவை தவிர, பாலாஜி, அன்னமய்யா, என்.டி.ஆர்., ஓய்.எஸ்.ஆர்., போன்றவர்களின் பெயர்களிலும், 26 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. மேலும் ஸ்ரீசத்ய சாய் மாவட்டம் 7,771 கி.மீ., பரப்பளவுடன், 17.22 லட்சம் மக்கள் தொகை உடையதாக இருக்கும். எனவும் மாவட்டத்தில் ஆறு சட்டசபை தொகுதிகளும், புட்டபர்த்தி உட்பட மூன்று வருவாய் கோட்டங்களும் இருக்கும் என அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை வரவேற்பு
புட்டபர்த்தி பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா பெயரில் ஆந்திராவில் புதிய மாவட்டம் அமைக்கும் முயற்சிக்கு, ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை வரவேற்பு தெரிவித்துள்ளது. அவை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அவரது 97வது பிறந்தநாளைக் கொண்டாட துவங்கும் நிலையில் மாநில அரசின் அறிவிப்பு அனைத்து சாய் பக்தர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.என தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE