ஜன., 27, 1893
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள வையச்சேரி கிராமத்தில், 1844 மே 26ல் பிறந்தவர், வைத்தியநாதன். ஏழாவது வயதிலேயே ராகம், பல்லவி பாடும் திறமை பெற்றார். 'சங்கிரக சூடாமணி, சங்கீத ரத்னாகரம்' முதலிய நுால்களை ஆராய்ந்து தெளிந்தார். கர்நாடக இசைக் கலைஞர்
தியாகராஜரின் நேரடி சீடரான மானம்புச்சாவடி வெங்கட சுப்பையரிடம், கர்நாடக இசையை முறைப்படி கற்றார். புதுக்கோட்டை, ராமநாதபுரம், எட்டையபுரம், கல்லிடைக்குறிச்சி, தஞ்சை, மைசூர், திருவாங்கூர் தர்பார்களில் தன் இசையை நிலை நாட்டியவர். தஞ்சாவூர் அரண்மனையில், சங்கீத வித்வான்களால் இயற்றப்பட்டு பாடப்படாமல் இருந்த, 72 மேளகர்த்தா ராகங்களுக்கு, மன்னர் சிவாஜியின் மாப்பிள்ளை சகாராம் சாஹேப்பின் விருப்பப்படி, வர்ண மெட்டுகளை அமைத்து, சபையில் அரங்கேற்றினார். சங்கீதத்துடன்,
சிவ கதைகள் கூறுபவராகவும் திகழ்ந்தார்.கடந்த 1893 ஜன., 27ல் தன் 49வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.மகா வைத்தியநாத அய்யர் காலமான தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE