வெளிநாடுகளிலும் கொண்டாட்டம்

Added : ஜன 26, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சிங்கப்பூர் :நம் நாட்டின் குடியரசு தினத்தை வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் உற்சாகமாக கெண்டாடினர்.நம் அண்டை நாடான சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள இந்திய துாதரகத்தில் இந்திய துாதர் அக்கினோ விமல் தேசிய கொடி ஏற்றி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரையை படித்தார். கொரோனா பரவல் காரணமாக தெற்காசிய நாடான சிங்கப்பூரில் இந்திய துாதரகம் 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக குடியரசு

சிங்கப்பூர் :நம் நாட்டின் குடியரசு தினத்தை வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் உற்சாகமாக கெண்டாடினர்.

நம் அண்டை நாடான சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள இந்திய துாதரகத்தில் இந்திய துாதர் அக்கினோ விமல் தேசிய கொடி ஏற்றி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரையை படித்தார்.
கொரோனா பரவல் காரணமாக தெற்காசிய நாடான சிங்கப்பூரில் இந்திய துாதரகம் 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக குடியரசு தின விழாவை கொண்டாடியது.

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள இந்திய துாதரகத்தில் நடந்த விழாவில் இந்திய துாதர் விக்ரம் துரைசாமி தேசிய கொடியை ஏற்றினார். இதில் இந்தியர்கள் பலர் பங்கேற்றனர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் இந்திய துாதரகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டு, கலாசார நிகழ்ச்சிகள் நடந்தன. ஆஸ்திரேலிய, நேபாளம், தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட
பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இந்திய குடியரசு தின விழாவுக்கு வாழ்த்து தெரிவித்து
செய்தி வெளியிட்டுஇருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
27-ஜன-202209:20:15 IST Report Abuse
Lion Drsekar இக்கரைக்கு அக்கறைகள் பறவாயில்லை என்று தோன்றும் அளவுக்கு தேசியம் வளர்வது பெருமையாக இருக்கிறது, வாழ்க தேசியம் வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X