தேசிய கொடியை தலைகீழாக பறக்க விட்ட கேரள அமைச்சர்

Added : ஜன 26, 2022 | |
Advertisement
காசர்கோடு:கேரளாவில் நடந்த குடியரசு தின விழாவில் அமைச்சர் ஒருவர் தேசியக் கொடியை தலைகீழாக பறக்க விட்டார். இந்தத் தவறு நீண்ட நேரத்துக்குப் பின்பே கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து தேசியக் கொடி தரையிறக்கப்பட்டு, சரி செய்து மீண்டும் ஏற்றப்பட்டது. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது.இங்குள்ள காசர்கோடு
 தேசிய கொடியை தலைகீழாக பறக்க விட்ட கேரள அமைச்சர்

காசர்கோடு:கேரளாவில் நடந்த குடியரசு தின விழாவில் அமைச்சர் ஒருவர் தேசியக் கொடியை தலைகீழாக பறக்க விட்டார். இந்தத் தவறு நீண்ட நேரத்துக்குப் பின்பே கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து தேசியக் கொடி தரையிறக்கப்பட்டு, சரி செய்து மீண்டும் ஏற்றப்பட்டது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது.இங்குள்ள காசர்கோடு மாவட்டத்தில் குடியரசு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, இந்திய தேசிய லீக் கட்சியைச் சேர்ந்த, மாநில துறைமுகம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் அஹமது தேவர்கோவில், தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி உரையாற்றினார்.
தேசியக் கொடி தலைகீழாக பறக்க விடப்பட்டுள்ளதை அங்கிருந்த நிருபர்கள் பார்த்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டது.தேசியக் கொடி கீழே இறக்கப் பட்டு, சரி செய்யப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டது.இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ''தேசியக் கொடியை அவமதித்த அமைச்சர், தன் பதவியில் இருந்து விலக வேண்டும். ''இந்த குளறுபடிக்கு காரணமானவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, பா.ஜ., மாநிலத் தலைவர் கே. சுரேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X