புதுடில்லி:கிளிமாஞ்சாரோ மலையில் ஏறி சாதனைப் படைத்த, 9 வயது சிறுவனுக்கு, 'பால புரஸ்கார்' விருது வழங்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் கலை, விளையாட்டு, கல்வி, சாகசம், சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் சிறுவர்களுக்கு, மத்திய அரசால் பால புரஸ்கார் என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு 29 குழந்தைகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.விளையாட்டு பிரிவில் விருது பெற்ற விராட் சந்திரா என்ற சிறுவன், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதை சேர்ந்த விராட், ஆப்ரிக்காவின் மிக உயரமான கிளிமாஞ்சாரோ மலையின் உச்சிக்கு சென்று சாதனைப் படைத்தார்.
இது குறித்து விராட் சந்திராவின் தாய் மாதவி கூறியதாவது:மலையேற வேண்டும் என்ற விருப்பத்தை விராட் எங்களிடம் முதலில் கூறியபோது பயந்தோம். பின், சரியான பயிற்சியாளரை நாங்கள் கண்டறிந்து, அவரிடம் விராட்டை சேர்த்தோம். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், கை மற்றும் கால் வலியுடன், கிளிமாஞ்சாரோ மலை உச்சிக்கு விராட் வெற்றிகரமாக சென்று வந்தான். தற்போது அவனது சாதனையை கவுரவிக்கும் வகையில், பால புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது, எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE