லக்னோ:உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில், மத்திய பிரதேசத்தில் வெடிகுண்டுடன் கடிதம் கண்டெடுக்கப்பட்டது.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்குவதால் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ம. பி.,மாநிலத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், நேற்று போலீசார் நடத்திய சோதனையில், மேம்பாலத்தின்கீழ் வெடிகுண்டு கண்டெடுக்கப் பட்டது.'டைமர்' எனப்படும் நேரத்தை நிர்ணயித்து வெடிகுண்டை வெடிக்கச் செய்யும் சாதனமும் அதில் பொருத்தப்பட்டிருந்தது. வெடிகுண்டு நிபுணர்கள் துரிதமாக செயல்பட்டு அதை செயலிழக்கச் செய்தனர்.
அந்த வெடிகுண்டுக்கு அருகில் இருந்த கடிதத்தில் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இது குறித்த விசாரணையை போலீசார் துவக்கி உள்ளனர். உ.பி., தேர்தலை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE