திருநெல்வேலி: தொழில் துவங்க கடன் பெற்றுத் தருவதாக கூறி வங்கிப் பணம் ரூ 51 லட்சத்தை மோசடி செய்த தனியார் நிறுவன அதிகாரி கைது செய்யபட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் ஆக்சிஸ் வங்கி செயல்படுகிறது. அதன் அருகில் Quess Corporate Ltd என்ற தனியார் நிதி நிறுவனம் பொதுமக்களுக்கு தொழில் துவங்க கடன் பெற்றுத் தரும் பணியை செய்தது. அந்த நிறுவனத்தில் உதவி தொடர்பு அதிகாரியாக 2018 - 2019 ல் பணியாற்றியவர் கார்த்திக் ராஜா 35.
இவர் திருக்குறுங்குடி, வள்ளியூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 426 பேர்களுக்கு சிறுதொழில் துவங்க ரூ 26,000 வீதம் கடன் பெற்று தருவதாக அடையாள அட்டை, படம் விபரங்களை பெற்றுள்ளார். ரூ 51 லட்சத்து 88 ஆயிரம் பெற்றுள்ளார். ஆனால் யாருக்கும் கடன் வழங்கவில்லை. இதுகுறித்து கெஸ் கார்ப்பரேட் நிறுவன மேலாளர் பிரவீன் புகாரின்பேரில் போலீசார் வடக்கு வள்ளியூரை சேர்ந்த கார்த்திக் ராஜாவை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE