நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு, 30 சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில், மாநில தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட 11 அரசியல் கட்சிகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், இக்கட்சிகளின் வேட்பாளர்களுக்கு, கட்சி சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.பதிவு செய்யப்பட்ட, அதே நேரத்தில் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்படாத 296 அரசியல் கட்சிகள் உள்ளன. இக்கட்சிகள் மட்டுமின்றி, சுயேச்சை வேட்பாளர்களும், வரும் தேர்தலில் அதிகம் போட்டியிட வாய்ப்புள்ளது.
இவர்களுக்காக 30 சின்னங்களை, மாநில தேர்தல் கமிஷன் ஒதுக்கிஉள்ளது. அதில், கிடார், பேட்ஜ், ஸ்பேனர், வைரம், உலோக உருண்டை, முகம் பார்க்கும் கண்ணாடி, அசைந்தாடும் நாற்காலி, பாட்டில், ஊஞ்சல், நீளக்குவளை, சாலை உருளை, பூப்பந்து மட்டை, திருகு ஆணி, கோட்டு, கோப்பு அடுக்கும் அலமாரி ஆகியவை இடம் பெற்று உள்ளன.
மேலும், முள் கரண்டி, கட்டில், ஹாக்கி பேட் பந்து, மகளிர் பணப்பை, மேஜை விளக்கு, கொம்பு இசைக்கருவி, கைப்பை, தீப்பெட்டி, டை, அலமாரி, குலையுடன் கூடிய தென்னை மரம், அரிக்கேன் விளக்கு, ஸ்பூன், தண்ணீர் குழாய், நடை தடி ஆகியவையும் இடம் பெற்று உள்ளன.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE