சென்னை:''நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி தொடரும்,'' என, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா., தலைமை அலுவலகத்தில், குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. தேசியக் கொடியை ஏற்றி, ஜி.கே.வாசன் இனிப்பு வழங்கினார்.விழாவில், மாநில பொதுச் செயலர் விடியல் சேகர், தலைமை நிலைய செயலர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மகளிர் அணி தலைவர் ராணி கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நிருபர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:நாட்டில் நல்லாட்சி நடந்து கொண்டிருக்கிறது. அது வல்லரசு நாடாக மாற வேண்டும் என்றால், கொரோனா தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.அதற்கு மக்களாகிய நாம், அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
கொரோனா பரவலை காட்டி, கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு மறுக்கிறது. அ.தி.மு.க., கூட்டணியில் த.மா.கா., தொடர்கிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தொடரும். தேர்தல் பணிகள் துரிதப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE