பிரசாரத்தை வேகப்படுத்த கே.எஸ்.அழகிரி அறிவுரை

Added : ஜன 27, 2022 | |
Advertisement
சென்னை:''பா.ஜ.,வின் அவதுாறு கருத்துகளுக்கு எதிரான பிரசாரத்தை காங்கிரசார் வேகமாக்க வேண்டும்,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசினார்.குடியரசு தின விழா, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா, 'காங்கிரஸ் கொள்கை முழக்கம்' என்ற நுால் வெளியீட்டு விழா, சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று நடந்தது. கே.எஸ்.அழகிரி பேசுகையில், ''காங்கிரஸ் கட்சி எந்த

சென்னை:''பா.ஜ.,வின் அவதுாறு கருத்துகளுக்கு எதிரான பிரசாரத்தை காங்கிரசார் வேகமாக்க வேண்டும்,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசினார்.
குடியரசு தின விழா, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா, 'காங்கிரஸ் கொள்கை முழக்கம்' என்ற நுால் வெளியீட்டு விழா, சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று நடந்தது. கே.எஸ்.அழகிரி பேசுகையில், ''காங்கிரஸ் கட்சி எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. ஆனால், காங்கிரஸ் மீது பா.ஜ., அவதுாறு கருத்துகளை பரப்பி வருகிறது. ''எனவே, பா.ஜ.,வுக்கு எதிரான பிரசாரத்தை காங்கிரசார் வேகமாக்க வேண்டும்,'' என்றார்.
முன்னாள் தலைவர் இளங்கோவன் பேசுகையில், ''அரியலுார் மாணவி தற்கொலை விவகாரத்தில், பா.ஜ., பொய் பிரசாரம் செய்து வருகிறது. ''காங்கிரசார் சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய காலம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காங்., வெற்றி பெற வேண்டும்,'' என்றார்.


தனித்து போட்டி?


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் அதிக இடங்களை கேட்டு பெறுவதில் அழகிரி உறுதியாக உள்ளார். இதுகுறித்து ஆலோசிக்க, தமிழக காங்., செயற்குழுக் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நாளை கூடுகிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில், 25 வார்டுகளை காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. தி.மு.க.,வோ, 10 முதல் 12 வார்டுகளை ஒதுக்க திட்டமிட்டுள்ளது.
மேயர் பதவிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க தி.மு.க., விரும்பவில்லை. ஆனால், நாகர்கோவில் மேயர் பதவியை மட்டும் காங்கிரஸ் கைப்பற்ற துடிக்கிறது.கன்னியாகுமரி மாவட்டத்தில், மூன்று எம்.எல்.ஏ.,க் களும், ஒரு எம்.பி.,யும் உள்ளனர். காங்கிரசுக்கு மேயர் பதவி ஒதுக்காவிட்டால், அம்மாவட்டத்தில் மட்டும் காங்., தனித்து போட்டியிடுவது குறித்து, செயற்குழுவில் ஆலோசிக்கப்பட உள்ளது.
அக்கூட்டத்தில், மாவட்டத் தலைவர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களிடம் கருத்துக்கேட்ட பின் ஒருமித்த முடிவை தமிழக காங்கிரஸ் எடுக்கும் என, மூத்த நிர்வாகிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X