'செம்மரம் கடத்தலின் பின்னணியில் உள்ளோர் மீது நடவடிக்கை தேவை'

Added : ஜன 27, 2022
Advertisement
சென்னை:'செம்மரக் கடத்தலுக்கு பின்னால் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை: இரண்டு நாட்களில், ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட, தமிழகத்தைச் சேர்ந்த 61 பேர் கைது செய்யப்பட்டனர். வேலுார், திருப்பத்துார் மாவட்டங்களின் ஒரு சில கிராமங்களைச்

சென்னை:'செம்மரக் கடத்தலுக்கு பின்னால் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை: இரண்டு நாட்களில், ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட, தமிழகத்தைச் சேர்ந்த 61 பேர் கைது செய்யப்பட்டனர். வேலுார், திருப்பத்துார் மாவட்டங்களின் ஒரு சில கிராமங்களைச் சேர்ந்தவர்களே செம்மரங்களை வெட்ட செல்கின்றனர்.
அரிய வகை மரங்களான, அவை சீனாவுக்கு கடத்தப்படுகின்றன. வெப்பத்தை தணிக்கும் செம்மரங்களை, சீனா தன் அணு உலைகளால் ஏற்படும் புவி வெப்பமயமாதலை தற்காத்துக் கொள்ள பயன்படுத்துகிறது.இதுகுறித்து, அப்பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன் பின்னணியில், பல அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பணம் பார்ப்பது உண்மை.
வறுமையில் மரம் வெட்ட செல்பவர்களை எல்லாம், தமிழர்கள் என்ற மொழி உணர்வை துாண்டிவிட்டு, அரசியல் குளிர் காய்வதை, சில அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் நிறுத்த வேண்டும்.செம்மரக் கடத்தலுக்கு பின்னால் உள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரு மாநில அரசுகளின் ஒத்துழைப்பின் வாயிலாக தான், இந்த குற்றங்களை நிறுத்த முடியும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X