தமிழர் பெருமையை பறைசாற்றும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு

Added : ஜன 27, 2022 | |
Advertisement
சென்னை:தமிழகத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெருமையை விளக்கும் அலங்கார ஊர்திகள், சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் பங்கேற்றன.டில்லி குடியரசு தின விழா அலங்கார அணிவகுப்பில், தமிழக அலங்கார ஊர்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தின் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக, தமிழக அரசு சார்பில் நடக்கும் குடியரசு தினக் கொண்டாட்டத்தில், அந்த
 தமிழர் பெருமையை பறைசாற்றும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு

சென்னை:தமிழகத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெருமையை விளக்கும் அலங்கார ஊர்திகள், சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் பங்கேற்றன.
டில்லி குடியரசு தின விழா அலங்கார அணிவகுப்பில், தமிழக அலங்கார ஊர்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தின் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக, தமிழக அரசு சார்பில் நடக்கும் குடியரசு தினக் கொண்டாட்டத்தில், அந்த அலங்கார ஊர்தி இடம்பெறும் என, முதல்வர் அறிவித்திருந்தார்.
அதன்படி, சென்னையில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில், நான்கு அலங்கார ஊர்திகள் இடம் பெற்றன. முதல் ஊர்தியின் முகப்பில், வள்ளுவர் கோட்டம் கல் தேர் இடம் பெற்றிருந்தது. இந்த ஊர்தியில், அரசு இசைக் கல்லுாரி மாணவர்கள், நாதஸ்வரம், தவில், வீணை போன்ற இசைக் கருவிகளில், மங்கள இசையை இசைத்தனர்.சுதா ஸ்வர்ணலட்சுமி பரத நாட்டியக் குழுவினர், அதற்கேற்ப நடனம் ஆடினர்.
இரண்டாவது ஊர்தி முகப்பில், வேலுார் கோட்டையில், 1,806ல் நடந்த சிப்பாய் புரட்சி நிகழ்வு காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. மேலும் ஊர்தியில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு, மருது சகோதரர்கள் உதவியுடன், இந்திய வரலாற்றில் தான் இழந்த நாட்டை வென்ற ராணி வீரமங்கை வேலு நாச்சியார்; அவரது பெண்கள் போர் படையை சேர்ந்த, தன் உடலில் தீ வைத்து, ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்கில் குதித்து, அதை அழித்து தன் உயிரை மாய்த்துக் கொண்ட குயிலி ஆகியோரின் சிலைகள் இடம்பெற்றன.
ஆங்கிலேயரின் ஆதிக்கத்திற்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன்; அவரது படையில் தளபதியாக திகழ்ந்த வீரன் சுந்தரலிங்கம்; ஆங்கிலேயப் படைகளை தனியாக சென்று அழித்த ஒண்டிவீரன் ஆகியோரின் சிலைகளும் அணிவகுத்தன.
'வெள்ளையனே வெளியேறு' என, முதன் முதலாக வீர முழக்கமிட்ட பூலித்தேவன்; பாளையக்காரர்கள், ஆங்கிலேயர்களுக்கு கப்பம்கட்டுவதை தடுத்த வீரன் அழகுமுத்துக்கோன் சிலைகள்; மருது சகோதரர்கள், வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோர் வழிபட்ட காளையார் கோவில் கோபுரம் ஆகியவையும் இடம் பெற்றிருந்தன.
மூன்றாவது ஊர்தி, சுதந்திரத்திற்காகப் போராடிய மகாகவி பாரதியார்; ஆங்கிலேயரின் கப்பல் வணிகத்திற்கு போட்டியாக, சுதேசி கப்பல் கம்பெனி நிறுவி, செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் வரலாற்றை விளக்கும் காட்சிகள்; சுப்பிரமணிய சிவா, விஜயராகவாச்சாரி ஆகியோர் பெருமையை போற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
நான்காவது ஊர்தி, ஈ.வெ.ராமசாமி, ராஜாஜி, முத்துராமலிங்கத் தேவர், காமராஜர், ரெட்டைமலை சீனிவாசன், வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன், வ.வே.சு.ஐயர், காயிதேமில்லத், குமரப்பா, கக்கன் ஆகியோரின் புகழை வெளிப்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
அலங்கார ஊர்திகளில், சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிலைகள் வரிசையாக நிறுத்தப் பட்டு இருந்தன. அதன் கீழே அவர்கள் பெயர் எதுவும் இல்லாததால், சிலரை அடையாளம் காண்பது, பார்வையாளர்களுக்கு சிரமமாக இருந்தது.


ஈ.வெ.ரா., சிலையால் சர்ச்சை!

தமிழக அரசின் அலங்கார ஊர்தியில், சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரிசையில், ஈ.வெ.ராமசாமி சிலை இடம் பெற்றிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும், சமூக வலைதளங்களில், கருத்து மோதல் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X